)
Tamilnadu Government: இந்திய வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன், மத்திய அரசு விவசாய உள்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund) என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர்கள் தங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பொதுவானது. இத்திட்டத்துக்கு தமிழ்நாட்டு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
கடன் தொகை மற்றும் மானியம் எவ்வளவு?
இந்தத் திட்டத்தின் கீழ், ரூ. 2 கோடி வரை கடன் பெற முடியும். இந்தக் கடனுக்கு 7 ஆண்டுகள் வரை 3% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இதனால், கடன் பெறும் விவசாயிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். மேலும், மத்திய அரசு கடன் உத்தரவாதமும் அளிக்கிறது. திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில், 10% பயனாளியின் பங்களிப்பாக இருக்க வேண்டும்.
என்னென்ன தொழில்கள் செய்யலாம்?
இந்த நிதி, பல்வேறு வகையான விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களை அமைக்கப் பயன்படுத்தலாம். உதாரணமாக, காய்கறி நாற்றங்கால் அமைத்தல், மண்புழு உரம் தயாரிப்பு, காளான் வளர்ப்பு, பசுமைக்குடில் (Poly house), சேமிப்புக் கிடங்குகள், பொருட்களைப் பிரித்துத் தரம் பிரிக்கும் இயந்திரங்கள், சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றுக்குக் கடன் பெறலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தத் திட்டத்திற்கு தனிப்பட்ட விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு விவசாய அமைப்புகளும் விண்ணப்பிக்கலாம். விவசாய தொழில்முனைவோர்.விவசாய குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, புதிய நிறுவனங்கள் (Start-ups), வணிக நிறுவனங்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் http://agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report)யுடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த பிறகு, திட்ட அறிக்கையை அருகிலுள்ள வங்கிக் கிளைகளுக்குச் சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்திற்கான வழிகாட்டுதல்களைப் பெற, பின்வரும் துறை சார்ந்த அலுவலர்களான வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், நபார்டு வங்கி, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்கள் ஆகியோர் அணுகலாம்.
இந்த அலுவலர்கள், கடன் பெறுவதற்கான தேவையான ஆவணங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள். இத்திட்டம், விவசாய உற்பத்தியை நவீனப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ