தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவிற்கு நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய எதிர்ப்பறை கிளம்பியுள்ளது என்று தெரிவித்தார். தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் கூறியது குறித்த கேள்விக்கு, தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ ஏதாவது தெரிவித்தாரா? இவர்கள் திரும்பத் திரும்ப இதே கருத்தை வலியுறுத்தியதால் மத்திய அமைச்சர் அமித்ஷா விகிதாச்சார அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் இதனால் தமிழகத்தில் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்த நாளான்று மதுக்கடைகளை மூடியே ஆக வேண்டும் - சீமான்!

அமைச்சர் பொன்முடி பேசியது அநாகரீகமான செயல், திமுக அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கின்றனர். யார் இந்த தகுதி வாய்ந்த குடும்ப பெண்கள்? மின்சார கட்டணம் 300 மடங்கு உயர்ந்துள்ளது. சொத்து வரி உயர்ந்துள்ளது. பால் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. மக்கள் மனநிலை மாறியுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய கழகம், ஆலாம்பாளையம் பேரூர் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மின்துறை அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பிருமான தங்கமணி பேசும்போது, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே முழுமையாக உள்ளது. இந்த தேர்தலை பொருத்தவரை ஏற்கனவே கூறியதைப் போன்று நல்ல கூட்டணியை அமைப்போம் என கூறியிருந்தோம். அதன் அடிப்படையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்துள்ளோம். இன்னும் வரும் காலங்களில் பல்வேறு கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி கட்சியாக அதிமுக இருக்கும்.
எனவே வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், திமுக ஆட்சியில் அவலங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் ஆகிய நீங்கள் நேரடியாக மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும். அதிமுகவினர் சிறிய தவறு செய்தாலும் ஊடகங்களில் பெரிதுபடுத்தி காட்டப்படுவதாகவும், திமுக செய்யும் தவறுகள் கண்டும் காணாமல் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்வதாகவும் குற்றம் சாட்டி பேசினார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை சட்டவிரோத மது விற்பனை, போதை பொருள் விற்பனை குறித்து மக்கள் மத்தியில் அதிமுகவினர் பேச வேண்டும் என கூறினார். இந்தக் கூட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | ஸ்டாலின், சபரீசன் வீட்டுக்கு ரெய்டு வரும்-பாஜக கூட்டணிக்கு பின் தம்பிதுரை பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









