தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அறிவிப்புகள்! இந்த துறைக்கு கூடுதல் லாபம்!

2025-26 நிதியாண்டுக்கான விரிவான நிதி நிலை அறிக்கையை மார்ச் 14-ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார், அதைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Feb 26, 2025, 06:14 AM IST
  • மகளிர் உதவித் தொகை அதிகரிக்கப்படுமா?
  • பட்ஜெட்டில் வெளியாகும் புதிய அறிவிப்புகள்!
  • அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு.
தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அறிவிப்புகள்! இந்த துறைக்கு கூடுதல் லாபம்!

குடிமக்களின் நலனை மேம்படுத்துவதில் தமிழக அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அடுத்த மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தார். இதில் மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே போல தமிழக அரசும் தங்களது பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் கடன் தரும் தமிழ்நாடு அரசு -யாருக்கு கிடைக்கும்?

தமிழக பட்ஜெட் 2025

எப்போதும்  மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 2025-26 நிதியாண்டுக்கான விரிவான நிதி நிலை அறிக்கையை மார்ச் 14-ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார், அதைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய நிதிநிலை பட்ஜெட்டுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும், அதே சமயம் அனைத்து துறை சார்ந்து மற்றும் தற்போதைய தேவைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம்

மாநிலத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைச்சரவை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கலைஞர் உரிமை தொகை தொடர்பாகவும், அரசு ஊழியர்கள் போராட்டம், மும்மொழி கொள்கை, இந்திய திணிப்பு போன்ற விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு கொடுக்காதது, தற்போதுள்ள முக்கிய பிரச்சனையாகும். எனவே வேண்டிய நிதியை பெறுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

மேலும், மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றச் சம்பவங்கள் உடனடி கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான கவலையாக உருவெடுத்துள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான பிரச்னைகளை அமைச்சரவை பரிசீலனை செய்துள்ள நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்ற உள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் பட்ஜெட்டில் பெண்களை மையப்படுத்திய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் வகையில், முதலீடு செய்ய விரும்பும் பெரிய நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தவும் அமைச்சரவையில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றம்

2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரைக்கு முன் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி அவையில் இருந்து வெளியேறினார். இது எதிர்பாராத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நெறிமுறை மற்றும் சட்டமன்றத்தில் நிறுவப்பட்ட மரபுகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் பற்றிய விவாதங்களைத் தூண்டியது.

மேலும் படிக்க - TN Budget 2025: பட்ஜெட்டில் ஸ்டாலின் போடும் பலே திட்டம்... 2026 தேர்தலே டார்கெட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News