திண்டிவனம் தொகுதியில் யாருக்கு சீட்? திமுக - விசிக இடையே கடும் போட்டி!

திமுக தலைமையில் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி திண்டிவனம் தொகுதியை குறி வைத்து வருவதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கணிசமான வாக்கு வங்கியை விடுதலை சிறுத்தைகள் வைத்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Mar 6, 2026, 04:45 PM IST
  • பரபரப்பான சட்டமன்ற தேர்தல்.
  • யாருக்கு சீட்?
  • திமுக - விசிக இடையே கடும் போட்டி!
திண்டிவனம் தொகுதியில் யாருக்கு சீட்? திமுக - விசிக இடையே கடும் போட்டி!

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட கட்சிகளை தங்களது கூட்டணியில் இணைத்துள்ளனர். தற்போது தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள முக்கிய தொகுதிகளை திமுக கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. மேலும் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை முடிந்த அளவிற்கு ஒதுக்கவும் திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் சட்டமன்ற தொகுதி முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது. தனி தொகுதியான இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க: இனி கிளாம்பாக்கம் சென்று அலைய வேண்டாம்.. தமிழக போக்குவரத்து கழகம் குட் நியூஸ்

திண்டிவனத்தை குறிவைக்கும் கூட்டணி கட்சிகள்? 

திமுக தலைமையில் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த தொகுதியை குறி வைத்து வருவதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கணிசமான வாக்கு வங்கிகளை விடுதலை சிறுத்தைகள் வைத்துள்ளது. இதன் காரணமாக திண்டிவனம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து திமுகவுக்கு வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றும் விசிக கணக்கு போடுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

திமுக நேரடியாக போட்டியிடுமா?

விடுதலை சிறுத்தைகள் இந்த தொகுதியை தொடர்ந்து கேட்டு வரும் நிலையில், எக்காரணம் கொண்டும் திண்டிவனம் தொகுதியை மற்ற கட்சிகளுக்கு கொடுக்கக் கூடாது என்று உள்ளூர் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து திமுக தலைமைக்கு குரல் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக இந்த தொகுதியில் கூட்டணி கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதையும் அல்லது வெளி ஆட்கள் களமிறங்குவதையும் உள்ளூர் திமுக தொண்டர்கள் விரும்பாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் திமுகவின் நேரடி வேட்பாளர் மட்டுமே களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தலைமைக்கு வைத்துள்ளனர். உள்ளூர் மக்களை நன்கு தெரிந்த திமுக வேட்பாளர் ஒருவருக்கு இந்த முறை சீட்டு கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். 

கடந்த தேர்தல் முடிவுகள் 

2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் சீத்தாபதி சொக்கலிங்கம் போட்டியிட்டார். இருப்பினும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். கிட்டத்தட்ட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் திண்டிவனம் தொகுதியை அதிமுக கைப்பற்றியது. பாமகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் இந்த வெற்றி அவர்களுக்கு சாத்தியமானது. இந்நிலையில் இந்த முறை அந்த தொகுதியை கைப்பற்ற திமுக முயற்சி செய்யும் என்றும் கூறப்படுகிறது. கடந்த முறை செய்த சிறு தவறுகளை சரி செய்து இந்த தேர்தலில் எப்படியாவது திண்டிவனம் தொகுதியை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளனர். 

திமுக சார்பில் யார் வேட்பாளர்?

திண்டிவனம் தொகுதி வேட்பாளராக மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளரான கோ. அய்யனார் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனம்பாட்டு கிராமத்தை சேர்ந்தவாரான கோ.அய்யனார், அந்த தொகுதி மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர் என்று கூறப்படுகிறது. முதுகலை பட்டமும், சட்டப்படிப்பில் முதுநிலை படிப்பை முடித்து 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் கோ.அய்யனார், திமுகவில் கிளைக் கழக செயலாளர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்து, தற்போது மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். திமுக கடந்த முறை இந்த தொகுதியை இழந்த நிலையில், அய்யனார் இந்த முறை திண்டிவனம் சட்டமன்ற தொகுதி சீட்டை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன், தலைமை கழகத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து தனது களப்பணி குறித்து எடுத்துக்கூறி தொகுதியில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை வார்த்தைகளை விதைத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இவரை தவிர பேரூராட்சி செயலாளர், பேரூராட்சி சேர்மன் மற்றும் மாவட்டக் கழக துணை செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்த ரவிக்குமார், தற்போது மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பழனி மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருக்கும் சீத்தாபதி சொக்கலிங்கம் மகன் செந்தில் முருகன் ஆகியோரும் போட்டி போட்டு வருகின்றனர்.

 

.க.ஸ்டாலின் இறுதி முடிவு என்ன?

திண்டிவனம் தொகுதியை குறிவைத்து ஒருபுறம் விசிகவும், மறுபுறம் திமுக நிர்வாகிகளும் காய் நகர்த்தி வருவதால், அறிவாலயம் யாருக்கு இந்த தொகுதியை ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கூட்டணி தர்மத்தை காக்க விசிகவுக்கு விட்டு கொடுக்கப்படுமா? அல்லது கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று திமுகவின் நேரடி வேட்பாளர் களமிறக்கப்படுவாரா? என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவின் கையில் தான் உள்ளது. 

மேலும் படிக்க - 'தப்பு பண்ணிட்டியே சிங்காரம்' உச்சக்கட்ட வெறியில் ஈரான்... அமெரிக்காவுக்கு பெரிய வார்னிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News