தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அதிவேக இணைய சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மானிய கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் தினசரி ஒவ்வொரு துறைகளுக்கும் மானிய கோரிக்கை காண விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைக்கான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலரது கேள்விகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
மேலும் படிக்க | பெண்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்: மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசு அப்டேட்
ஒவ்வொரு வீடுகளுக்கும் அதிவேக இணைய சேவை
தமிழகத்தில் தற்போது கேபிள் டிவி சேவை வழங்கப்பட்டு வருவது போல, விரைவில் ஒவ்வொரு வீடுகளுக்கும் அதிவேக இணைய சேவை வழங்கப்பட உள்ளது. 100 mbps வேகத்தில் ஒரு மாதத்திற்கு ரூபாய் 200 கட்டணத்தில் இந்த அதிவேக இணைய சேவை வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதேபோல இ சேவை மையங்களில் மக்கள் பெறக்கூடிய தகவல் அனைத்தும் இனி வாட்ஸ் அப் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
தமிழக அரசின் இந்த புதிய அதிவேக இணைய சேவை திட்டத்தை முதற்கட்டமாக 2000 அரசு அலுவலகங்களில் செயல்படுத்த உள்ளனர். மேலும் 5000க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய சேவை வசதி வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனையும் நிவர்த்தி செய்ய முயற்சி செய்து வருகிறோம். விண்ணப்பங்கள் வந்த கிராமங்களில் என்ன மாதிரியான அடிப்படை வசதிகள் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்தார். இன்றைய உலகில் மிகவும் அவசியமாக உள்ள இன்டர்நெட்டை அரசு குறைந்த விலையில் அளித்தால் நிச்சயம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வருகின்றனர். இதனால் பல்வேறு இளைஞர்களும், பொதுமக்களும் ரீசார்ஜ் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். மாணவர்களுக்கு இணையம் மூலம் கல்வி கற்கும் சூழலும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாத மாதம் அதிக செலவு செய்து இணைய சேவையை பெற முடியாத பலருக்கும் தமிழக அரசின் இந்த புதிய திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை தமிழக அரசு எந்த அளவிற்கு சாத்தியப்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









