தமிழ்நாடு அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் - ராமதாஸ் பேச்சு!

திமுக 40 சுங்கச்சாவடிகளை 19ஆக குறைப்போம் என சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது ஆனால் மூன்று ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் எந்த சுங்கச்சாவடியும் மூடப்பட்டவில்லை என்று ராமதாஸ் குற்றச்சாட்டு.

Written by - RK Spark | Last Updated : Feb 6, 2025, 07:24 PM IST
  • பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
  • தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
  • முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் - ராமதாஸ் பேச்சு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இருதரப்பு ஒற்றுமையும் நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே இல்லை விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே இல்லை. தமிழ்நாட்டுக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

விழுப்புரத்தில் கட்டப்பட்டுள்ள 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிபண்டபத்தை நானும் ஜிகே மணியும் பார்வையிடுவோம் என்றும், அதற்கான நேரம் குறிக்கப்படவில்லை என தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் கிடைத்ததுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை மன்னிக்க முடியாது. கடுமையான தண்டனையை அரசும், காவல்துறையும் பெற்றுத்தர வேண்டும். அரசு பள்ளிகள் எந்த அளவுக்கு பாதுக்காப்பவை என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் அடுத்த இரு ஆண்டுகளில் விக்கிரவாண்டி, தஞ்சாவூர், உள்ளிட்ட 963 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை பயன்பாட்டு வரவுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் எந்த இடத்திற்கும் சுங்க கட்டனம் செலுத்தாமல் பயனிக்க முடியாது என்ற நிலை உருவாகிவிடும். விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடி அமைப்பது, கட்டனனத்தை உயர்த்துவது, காலவதியான சுங்கச்சாவடியில் பனம் வசூல் செய்வது மக்களை சுரண்டும் செயலாகும். இதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக 40 சுங்கச்சாவடிகளை 19ஆக குறைப்போம் என சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது ஆனால் மூன்று ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் எந்த சுங்கச்சாவடியும் மூடப்பட்டவில்லை, மேலும் புதிதாக 24 சுங்கச்சாவடிகள் திறக்கப்படவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 26ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி என்னிக்கையை குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களை நேர்கால் மூலம் நியமிப்பதை ஏற்க முடியாது. சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை என்னிக்கை அதிகமாக உள்ளது. நேர்கானல் மூலம் தேர்வு செய்தால் ஊழலுக்குதான் வழிவகுக்கும். கடந்த காலத்தில் இதனை எதிர்த்த ஸ்டாலின் தற்போது அதயே செய்வது நியாயம் இல்லை. எனவே போட்டி தேர்வுகள் மூல நியமிக்க அரசு முன் வர வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க | கல்லூரி மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News