தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!! பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டலாம் - அறிவிப்பு வெளியானது

Tamilnadu government scheme : தமிழ்நாட்டில் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டுபவர்களுக்கு“முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” மூலம் பலன் பெறலாம். இந்த திட்டம் குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 13, 2025, 07:25 AM IST
  • தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்
  • பழைய வீட்டை மறுகட்டுமானம் செய்யலாம்
  • திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்
தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!! பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டலாம் - அறிவிப்பு வெளியானது

Tamilnadu government Housing scheme : தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டம் புது வீடு கட்டுபவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் பழைய வீட்டில் இருப்பவர்கள் அதை மறுகட்டுமானம் செய்ய நினைத்தால், அதற்கும் தமிழ்நாடு அரசு நிதியுதவி அளிக்கிறது. “முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” என்ற திட்டத்தின் மூலம் பயனாளிகள் பலன் பெறலாம். இந்த திட்டம் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” என்ற புதிய திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

தமிழ்நாடு அரசின் “முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” என்ற புதிய திட்டத்தின் கீழ், 2000-2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாட்கோ, பழங்குடியினருக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், ஊரக பகுதிகளில் கட்டப்பட்டு, முழுவதும் பழுதடைந்து தற்போது பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் கூரை கொண்ட வீடுகளை 2025-26-ஆம் ஆண்டில் மறு கட்டுமானம் செய்ய தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் 2000-2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாட்கோ, பழங்குடியினருக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட இத்தகைய வீடுகளின் பயனாளிகள் அல்லது அவ்வீட்டில் குடியிருக்கும் அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகள் தற்போது மிகவும் சிதலமடைந்து முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கீரீட் கூரை கொண்ட வீடுகள் மட்டுமே தகுதியுள்ள வீடுகளாக கண்டறியப்பட்டுள்ளன.

கிராம ஊராட்சி அளவிலான தேர்வுக்குழு மூலம் இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 210 சதுர அடிக்கு உட்பட்ட அளவில் தங்கள் வீடுகளை மறுகட்டமைப்பு செய்துகொள்ள ரூ.2,40,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு அரசால் நேரடியாக தொகை விடுவிக்கப்படும். 

ஆகவே, மேற்காணும் வீடுகளில் குடியிருப்போர் தங்களது நிலஉடமை ஆவணங்களான பட்டா அல்லது பத்திரம், ஆதார் அட்டை, பயன்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு புத்தகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை, பயனாளியின் பாஸ்போட் அளவிலான புகைப்படம், அலைபேசி எண் மற்றும் தற்போது குடியிருக்கும் வீட்டின் பழுதின் நிலை தெரியும் வகையில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் எடுத்த வண்ணப் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அல்லது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) என்ற பெயரில் அஞ்சல் மூலமோ 25.04.2025 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை மழை வெளுக்கும்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் எச்சரிக்கை!

மேலும் படிக்க | வெளிநாட்டில் வேலை.. கோவையில் லட்சக் கணக்கில் மோசடி.. ஒருவர் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News