Tamilnadu Government Scheme : தமிழகத்தில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளன. இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்' என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு ஜீன் மாதம் 2 - ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த வகுப்பிற்க்கு பயிற்சிக் கட்டணமாக ரூ.80,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது ஐடிஐ அல்லது 12ம் வகுப்பு:படித்திருப்பதுடன், தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 2 வருட அனுபவத்துடன் இருப்பவர்கள் மற்றும் தகுதியானவர்கள் இந்த பயிற்ச்சி வகுப்பில் பயன்பெற https://www.editn.in/Web. OneYearCourse என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், விண்ணப்பித்தவர்களில் பொருளாதார நிலையின்பால் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியின் கீழ் 5 மாணவர்களுக்கான பயிற்சி கட்டணம் வழங்ப்பட உள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில்முனைவோர், இந்த தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் ஓராண்டு சான்றிதழ் பயிற்ச்சியில் சேர்ந்து பயனடையலாம்.
மேலும் தகவலுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளர், திருப்பத்தூர் அவர்களை தொடர்புகொள்ளவும் 8940499259. மேலும் சேர்க்கைக்கு (Admission) 8668101638, 8668107552 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் திருமதி.க.சிவசௌந்திரவல்லி,இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், : தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை, அரசினர் சிறுவர் இல்லம் மற்றும் ஸ்ரீவைகுண்டம், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு சிறுமியர் இல்லம் மற்றும் அரசின் மானியம் பெற்று இயங்கி வரும் 8 குழந்தைகள் இல்லங்களும் இளைஞர் நீதிச் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-கீழ் பதிவு பெற்று இயங்கி வருகின்றன. பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள். பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் ஆகியோர் தூத்துக்குடி. குழந்தை நலக்குழு அனுமதி பெற்று தட்டப்பாறை அரசினர் சிறுவர் இல்லத்திலும் ஸ்ரீவைகுண்டம், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு சிறுமியர் இல்லத்திலும் மற்றும் அரசின் மானியம் பெற்று இயங்கி வரும் 8 குழந்தைகள் இல்லங்களிலும் 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் தங்கி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
அவ்வில்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு தேவையான கல்வி, உணவு, இருப்பிடம், திறன் சார்ந்த பயிற்சிகள் அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு தேவையான தங்கும் அறை, வகுப்பறைகள், நூலகம், மற்றும் கணிணி மற்றும் தட்டச்சு பயில்வதற்கான அறைகள் மற்றும் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளன. அரசின் வழிகாட்டுதலின்படி நியமனம் செய்யப்பட்ட ஆற்றுப்படுத்துநர்களால் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. மருத்துவத்துறையின் மூலமாக குழந்தைகளுக்காக இல்லங்களிலேயே மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள் கல்வி சுற்றுலா சென்று வருகின்றனர். மாவட்ட மற்றும் மாநில அளவில் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
எனவே, பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை 2 அரசு குழந்தைகள் இல்லங்களிலும் அரசு மானியம் பெற்று இயங்கிவரும் 8 குழந்தைகள் இல்லங்களிலும் தங்கி கல்வி பயின்று பயனடைய விரும்புவோர் மாவட்ட குழந்தைள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணி நகர். பாளை ரோடு. தூத்துக்குடி மாவட்டம் 628 003 (தொலைபேசி எண்: 0461-2331188) என்ற முகவரியிலும், தூத்துக்குடி குழந்தை நலக்குழுவினை 176, முத்துமாலை பில்டிங் , மணி நகர், பாளை ரோடு. தூத்துக்குடி மாவட்டம் 628 003 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கடைசி வாய்ப்பு.. உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்? இதை செய்ய மறக்காதீர்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









