விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட்நியூஸ் - ஆனால் 2 நாள் மட்டுமே டைம் இருக்கு..!!

Tamilnadu : தமிழ்நாடு விவசாயிகள் தங்களின் நில உடைமை விவரங்களை பதிவு செய்வதற்கான காலவகாசத்தை நீட்டித்துள்ளது அரசு. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே காலவகாசம் இருக்கிறது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 13, 2025, 08:33 AM IST
  • தமிழ்நாடு அரசின் முக்கிய செய்தி
  • விவசாயிகளுக்கு 2 நாள் மட்டுமே காலவகாசம்
  • உடனடியாக இதை செய்தாக வேண்டும்
விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின்  குட்நியூஸ் - ஆனால் 2 நாள் மட்டுமே டைம் இருக்கு..!!

Tamilnadu Government Latest News: விவசாயிகள் நில உடைமை விவரங்கள் பதிவு ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பிரதமர் கௌரவ உதவித்தொகை, திட்டத்தில் பயன்பெற தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம். இதற்கு ஏப்ரல் 15 கடைசி நாளாகும்.விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரதமரின் கௌரவ உதவித்தொகை மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி மத்திய மாநில அரசுகள் ஊக்குவித்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Add Zee News as a Preferred Source

மத்திய அரசு வழங்கும் பிரதமரின் கௌரவ உதவித்தொகை விவசாயி அல்லாதவர்களுக்கு சென்று விடக்கூடாது என்று இணைய வழியில் பதிவு செய்து மத்திய அரசு பிரதமரின் கௌரவ உதவித்தொகை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது. விவசாயிகள் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கவும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் அல்லாத நபர்கள் பயனடைய கூடாது என்பதற்காக ஒவ்வொரு விவசாயிக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை வேளாண்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை சான்றளிப்பு துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகிய துறையினர் வாயிலாக அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விவசாமிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை சுமார் 92.000 விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் அரசு அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ ஏப்ரல் 15 ம் தேதிக்குள் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விவசாயிகள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் தனி அடையாள எண் வழங்கப்படும்.

இதுவரை 4 மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பிரதமரின் கௌரவ உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20 வது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும். தனி அடையாள எண் பெற பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு 20 ஆவது தவணை வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படாது. மேலும் இதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி இனியும் காலம் தாழ்த்தாமல் பிரதமரின் கௌரவ உதவித்தொகை பெறவும் மற்ற ஏனைய மானியங்களை பெறவும் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி விரைவாக தனி அடையாள எண் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை இந்த நாளில் வருகிறது: இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது.... இதுதான் காரணம்

மேலும் படிக்க  | PM Kisan 19வது தவணை இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது: காரணம் இதுதான்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News