வட மாநிலத்தவர் யாரும் குளிக்கக்கூட மாட்டார்கள் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

அதிமுகவை பிடித்து நொண்டி, கூன், குரூடு இவர்களை சேர்த்து பாஜக, திமுகவை எதிர்க்க பாக்குறீங்க..  நாங்க அவற்றை எல்லாம் சமாளிக்க தயாராக இருக்கிறோம் என்று துரைமுருகன் பேச்சு.

Written by - RK Spark | Last Updated : Apr 6, 2025, 08:57 AM IST
  • தமிழகத்தில் இருப்பது இரண்டு கட்சிகள் தான்.
  • மற்றவைகள் எல்லாம் கட்சிகள் இல்லை.
  • திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
வட மாநிலத்தவர் யாரும் குளிக்கக்கூட மாட்டார்கள் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  இளையரசனேந்தலில் திமுக சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் கலந்து கொண்டு பேசுகையில், சமீபத்தில் சென்னை மாநகரத்தில் சளி மற்றும் இருமலுடன் கூடிய வியாதி சென்னை மாநகரத்தில் பரவுகிறது. அதில் மாட்டி மூன்று மாதம் காலமாக எங்கும் போகாமல் இருந்தேன். சட்டமன்றத்திற்கு போனால் கூட ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அமர்ந்து விடுவேன். அப்படி இருந்தா என்னை பொதுக்கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜா அழைத்தார். வேறு யாரு அழைத்து இருந்தாலும் வந்திருக்க மாட்டேன் அழைத்தது ராஜா அல்லவா. போகமால் இருக்க முடியாது என்பதால் வந்து விட்டேன்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இங்கு வந்து உங்களை பார்க்கும் போது  எனக்கு மலரும் நினைவுகள் வருகிறது. திமுக அரசின் சாதனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் முதலில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். திமுக ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒன்று உள்ளது மோடி பிரதமராக உள்ளார் அவருக்கு பக்கத்தில் அமைச்சர்களும் உள்ளனர். அவர்களுக்கு என்ன வேலை திட்டம் போட வேண்டும், பணம் தர வேண்டும், நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், மக்களுக்கு வேண்டிய திட்டங்களை தர வேண்டும் .ஆனால் அதை விட்டுவிட்டு வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு சலாம் செலுத்துகிறவன் அங்கு முதலமைச்சராக இருக்க வேண்டும். சலாம் சொல்லாதவனை தூக்கி எறிய வேண்டும் என்பதனை செய்கின்றனர்.

எதற்காக இந்த நாட்டில் இரண்டு கலாச்சாரங்கள் இருக்கிறது. ஒன்று வடநாட்டில் இருக்கக்கூடிய கலாச்சாரம்‌ அது நமக்கு அசிங்கமான ஒன்று. நாம் பண்பாடும் மிக்கவர்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒரு அமைச்சர் சொல்கிறார் நம்மைப் பார்த்து நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறார். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்னே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ் க்குடி என்று சொல்வார்கள். எங்கள் மன்னர்கள் இந்தியாவின் இமயத்திலே கொடி  போட்டு இருக்கிறார் சேரன் செங்குட்டுவன். ஒரு முறை கங்கை வரை ராஜேந்திர சோழன் படை எடுத்து வெற்றி கொண்டார். கங்கைகொண்டான் என்ற பெயர் பெற்றதால் கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கினார். இது பற்றி தமிழ் புலவர் ஒரு முறை வடநாட்டில் சொன்னபோது அங்குள்ள மன்னர் ஒருவர் என்போல் மன்னவர் ஒருவர் இல்லை என்று சொன்னபோது செங்குட்டுவன் படையெடுத்து அந்த மன்னரை வெற்றி கொண்டு அங்கு இருந்த ஒரு பாறையை எடுத்து கண்ணகிக்கு சிலை எடுக்க கொண்டு வந்தவன். இது நாங்கள் பெற்ற நாகரிகம்.

வட மாநிலத்தவர் யாரும் குளிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் தமிழர்கள் ஒரு வேளைக்கு இரண்டு வேலை குளிப்பார்கள் என்றார். வட மாநிலத்தவர்கள் குளிக்காமல் இருப்பது பற்றி ஒரு கதை கூறிய பின்னர்  அப்படிப்பட்ட கேவலமான பிறவி நீங்கள். பாராளுமன்றத்தில் நின்று தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறுகின்றனர். நாகரீகம் என்றால் என்னவென்று தெரியுமா அதற்கு இலக்கணம் உண்டா இலக்கியம் உண்டா. நம் ஆட்சியை கைப்பற்றுவது அவர்கள் நோக்கம் கிடையாது தமிழ் கலாச்சாரத்தை அழிப்பது தமிழர்கள் என்ற உணர்வை மங்க வைப்பது, பெரியாரின் சமூகவிரோதியாக காட்டுவது அண்ணாவை சாதாரண மனிதனாக காட்டுவது. இந்த நாட்டில் அண்ணா இல்லை கருணாநிதி இல்லை எம்ஜிஆர் இல்லை இப்படிப்பட்ட பெருந்தலைவர்கள் இல்லை இந்த நேரத்தில் தமிழகத்தில் ஒரு சின்னப் பையன் ஒற்றை உருவம் அவனால் எதிர் கொள்ள முடியாது என்று பேசி இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு தெரியாது முத்துவில் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் ஒற்றை நாடி உருவம் தான் . ஆனால் வைரம் பாய்ந்த நெஞ்சம். நான் கலைஞரோடு 55 ஆண்டுகள் அவரோட மடியில் இருந்தவன் நான். அதனால் அவருடைய குணங்கள் தெரியும், அவருடைய வீரம் விவேகம் எனக்கு தெரியும், அவரை நாங்கள் சில நேரங்களில் கலாட்டா செய்து விடுவோம். அதை அவரும் ஏற்றுக்கொள்வார். ஆனால் அவரை அண்டர்ஸ்டாண்ட் பண்ண எனக்கு முதல்வர் மு க ஸ்டாலினை என்னால் அண்டர்ஸ்டாண்ட் பண்ண முடியவில்லை சில நேரங்களில் என்னை மயக்குகிறார். அண்ணா கருணாநிதி இரண்டு பேரையும் ஊறவைத்து அரைத்து வைத்து உருவம் செய்தால் அதுதான் மு.க ஸ்டாலின். அவரை சின்னப் பையன் என்று சொல்லக்கூடாது கரிகால பெருவளத்தானை அப்படித்தான் சின்ன பையன் என்று சொல்லுவார்கள் ஏழு மன்னர்களை வெற்றி கொண்டான். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் நமது என்கிறார் நிச்சயமாக வெல்வார்.

தமிழகத்தில் இருப்பது இரண்டு கட்சிகள் (திமுக - அதிமுக) தான். மற்றவைகள் எல்லாம் கட்சிகள் இல்லை. பாஜக பக்கம் அதிமுக செல்லுமா என்று எடப்பாடி பழனிச்சாமி இடம் கேட்டனர் இந்தப் பக்கம் உதிக்கின்ற சூரியன் மாற்று உதித்தாலும் போகமாட்டேன் என்றார் முதலில், இப்போது சும்மா டெல்லிக்கு போய் சும்மா அமித்ஷாவை சந்தித்து வந்ததாக கூறுகிறார். நீங்க மட்டுமா இல்லை நான்கு பேருடன் சென்று வந்தேன் என்றார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அதிமுக பாஜக ஒரே அணியில் சேரும். ஆனால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சசிகலா கூட்டத்தை சேர்க்க மாட்டேன் என்று கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி கெட்டிக்கார தான் .இவர்களை சேர்த்தால் நான் ஒழிந்தேன் என்கிறார். இது பற்றி நானும் முதல்வர் மு க ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது பாஜக அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார், ஓபிஎஸ் சசிகலாவை சேர்க்க செங்கோட்டையன் சென்று வந்ததாக கூறினார்.

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு வருமா? வராதா? முக்கிய அப்டேட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News