சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த  மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான  வேல்முருகன் கலந்துகொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசு கோரிக்கை வைக்காமலேயே உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளித்துள்ளது. 21 உயிர்களை தியாகம் செய்து 108 சாதிகளுக்கு உரிமை பெற்று தந்த இயக்கம் நாங்கள்.  இருந்த போதிலும் அந்த இட ஒதுக்கீடு, சமூக நீதி முழுமையாக கிடைக்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது . உச்ச நீதிமன்றம் சரியான புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள்விடுக்கிறோம். நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 10.5% இட ஒதுக்கீட்டில் உள்ள பிழைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் இல்லை என்றால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டை நடத்த வேண்டும் 


இதுவே அனைவருக்கும் சம அளவிலான இட ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்யும். இதுகுறித்து தமிழக முதல்வரிடத்தில் ஏற்கனவே மூன்று முறை முறையிட்டுள்ளேன். அவர் இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இருப்பினும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதிலும், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் உள்ள சிக்கலை சரி செய்வதிலும் கால தாமதம் ஏற்படுவதால் அரசின் கவனத்தை ஈர்க்க இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டமானது இன்று நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க | சோலாப்பூரியில் நெளிந்த புழுக்கள்; வசந்த பவன் கொடுத்த அதிர்ச்சி!


1987ஆம் ஆண்டு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 108 சாதிகளுக்கு அப்பொழுதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. இதில் தற்பொழுது கேரளா , கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்தை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.


இதன் மூலம் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இந்த ஆண்டு நடைபெற்று வரும் மருத்துவ, பொறியியல் கலந்தாய்வுகளில்கூட 10.5  சதவீத  இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு சீட் கிடைக்காத ஒரு சூழல்தான் நிலவி வருகிறது. தமிழகத்தில் தமிழர் அல்லாத 15 பேர் மாவட்ட ஆட்சியர்களாக தற்போது உள்ளார்கள்” என்றார்.


மேலும் படிக்க | அந்த மனசுதான் கடவுள்! பிச்சை எடுத்த 50 லட்சத்தை அரசுக்கு வழங்கிய நபர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ