)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி சட்டமன்ற தொகுதி, தேன்கனிக்கோட்டையில் மாற்றுக்கட்சியினர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும், இணைப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் தவாக தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். அதில் யூடியூப், டிக்டாக் செயலிகளில் பணத்திற்காக ஆடைகளின்றி, அறைகுறையாக நடனமாடி பணம் சம்பாதிக்கும் கேவலமான தொழிலை தவிர வேறு இருக்க முடியுமா? பார்வையாளர்களை பெற இவர்கள் இப்படி செய்கிறார்கள், பள்ளி படிப்பை படிக்க பிள்ளைகளுக்கு செல்போன் கொடுத்தால், இது போன்ற கேவலமாக காட்சிகளை பார்க்க வாய்ப்புள்ளதை நான் இப்போதல்ல, ஸ்மார்ட் போன் வந்த காலத்தில் முதல் பேசி வருகிறேன்.

விஜய், படிக்கிற மக்களை ஊக்குவிக்கிறார்.. உதவுகிறார் நீங்கள் உதவினீர்களா என கேட்கிறார்கள்.. நான் உதவியவர்கள் ஏராளம், படித்தவர்கள் அதிகம் ஆனால் அவர்கள் வெளியே விளம்பரப்படுத்திக்கொள்ளாத மான மரதமிழர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள்.. உதவிகளை வாரி வழங்கிய நல்ல நடிகர் விஜயகாந்த் தவறு செய்தபோது தவறு என கண்டித்தவன் நான், அவருக்கான ரசிகர்களை விட விஜய்கான ரசிகர்கள் பெரியவர்களா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்பிடிக்கும் காட்சிகளை எதிர்த்தவன் நான்..
தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காக தவாகவினர் போராடி வருகின்றனர். எந்த ரசிகரும் போராடவில்லை இதனை உடைத்து பேசினால் பள்ளி மாணவர்களை வைத்து பேச வைக்கிறார்கள் நாங்கள் தற்குறி என்கின்றனர்.. அவர்கள் தான் தற்குறி, மாணவர்களுக்கு பரிசு வழங்கிவதை சூட்டிங், ஷோ நடத்தி வருகிறார்கள்.. கதாநாயகனாக இல்லாமல் துணை நடிகராக நடிக்கும் பாலா தான் சம்பாதித்ததில் ஆம்புலன்ஸ் வாங்கி தருகிறார், பல உதவிகளை செய்கிறார் சூட்டிங் நடத்தவில்லை. அகறம் அறக்கட்டளை, லாரன்ஸ் ஆகியோர் பல உதவிகளை செய்வதை சூட்டிங் செய்வதில்லை என விஜயை குறிப்பிட்டு விமர்சித்து பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ