)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மறுநாள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) ஆகிய 2 நாட்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதால், டாஸ்மாக் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இதுதவிர, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள், குருபூஜை போன்ற நாட்களில் விடுமுறை விடுக்கப்படும்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 31 மற்றும் 31ஆம் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலமானது, நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை, மேல்புறம் முதல் குழித்துறை, நாகர்கோவில் முதல் சங்குதுறை கடற்கரை, சுசீந்திரம் முதல் கன்னியாகுமரி உள்ளிட்ட 11 இடங்களில் நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை, மேல்புறம் முதல் குழித்துறை, நாகர்கோவில் முதல் சங்குதுறை கடற்கரை, சுசீந்திரம் முதல் கன்னியாகுமரி, தோவாளை முதல் பள்ளிகொண்டான் அணை, கூனாலுமூடு முதல் மிடாலம், அஞ்சுகண்கலுங்கு முதல் தேங்காய்பட்டணம், செருப்பாலூர் முதல் திற்பரப்பு, வைகுண்டபுரம் முதல் வெட்டுமடை, மேல்புறம் முதல் குழித்துறை, மற்றும் பம்மம் முதல் குழித்துறை வரை உள்ள 11 இடங்களில் நடைபெற உள்ளது.
இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்படும். தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ, அவர்கள் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ