)
Tenkasi Bus Accident Latest News: நாட்டில் சாலை விபத்துகள் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. சாலை விபத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். சாலை விபத்துகளை தடுக்க மாநில மற்றும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலை விதிகளையும் கடுமையாக்கி வருகிறது. இருப்பினும், சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான், தென்காசி மாவட்டத்தில் கோர விபத்து ஒன்று நடந்துள்ளது. இந்த கோர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது.
மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பேருந்தும், தென்காசியில் இருந்து கோவில்பட்டி நோக்கிச் சென்ற மற்றொரு பேருந்தும் இன்று (நவம்பர் 24) ஒன்றுக்கொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலில் இரண்டு பேருந்துகளும் கடும் சேதம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்கள், காவல்துறை அதிகாரிகள் விரைந்தனர்.
அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு பேருந்தில் பயணித்த பயணிகள் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்து பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். பேருந்து ஓட்டுநரின் வேகம் மற்றும் அலட்சியமே விபத்துக்குக் காரணம் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர் மற்றும் சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், "தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (24.11.2025) காலை சுமார் 11.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த ஐந்து பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 56 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என கூறப்பட்டு இருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ