முதல்வர் முக ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த விஜய்! வைரலாகும் பேச்சு!

Vijay Speech: இன்று சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுவில் தலைவர் விஜய் தமிழக அரசையும், மத்திய அரசையும் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2025, 02:25 PM IST
  • தவெக தலைவர் விஜய் பேச்சு.
  • திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • மத்திய அரசையும் விமர்சித்துள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த விஜய்! வைரலாகும் பேச்சு!

Vijay Speech: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் திமுக அரசை விமர்சித்து கேள்வி எழுப்பினர். விஜய் திமுக மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 17 தீர்மானங்கள்!

தலைவர் விஜய் பேச்சு

- மாண்புமிகு மன்னராட்சி முதல்வரே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீரப்பா சொன்னால் போதாது. அதை செயலிலும், ஆட்சியிலும் காட்டணும் முதல்வரே.

- ஒரே குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா?

- மாநாடு முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஏராளமான தடைகள் கொடுத்தனர்.

- சொல்ல முடியாத அளவிற்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது.

- உங்க ஆட்சிய பத்தி கேள்வி கேட்டா மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது?

- புதிய வரலாற்றை படைக்க தயாராக இருங்கள்,

- ஒரே குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா?

- மக்கள் பிரச்சினைகளை மடை மாற்றி மக்கள் விரோத ஆட்சியை, மன்னர் ஆட்சி போன்று நடத்தி வருகிறார்கள்

- நானும் அடி அடினு அடிக்கனுமா? யோசிக்கிறேன்

- மத்திய அரசுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சி தமிழகத்திலும் நடைபெறுகிறது

- அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது

- கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்கள் அரசுக்கு, ஏன் ஜி தமிழ்நாடு, தமிழர்கள்னாலே அலர்ஜி? 

- தமிழ்நாட்டுல இருந்து வர ஜிஎஸ்டியை கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க. ஆனா, பட்ஜெட்டுல தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கமாட்டேன்கிறீங்க.

- நம்ம புள்ளைங்களோட படிப்புக்கு நிதி ஒதுக்கமாட்டேன்கிறீங்க. ஆனா மும்மொழி கொள்கையை திணிக்கிறீங்க. 

- தமிழ்நாட்ட கொஞ்சம்  பாத்து ஹேண்டில் பண்ணுங்க சார். ஏன்னா தமிழ்நாடு பல பேருக்கு தண்ணீ காட்டுன ஸ்டேட்டு சார். கொஞ்சம் பாத்து செய்யுங்க சார்.

- உங்க ஆட்சிய பத்தி கேட்டா மட்டும் உங்களுக்கு ஏன் சார் இவ்வளவு கோவம் வருது. நீங்க மட்டும் ஒழுங்கா ஆட்சி நடத்தியிருந்தா பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சரியா இருந்துருக்கும்.

- பெண்களுக்கு எதிரா நடக்கிற கொடுமைகள சொல்ல முடியல சார். இதுல வேற உங்கள `அப்பா’னு கூப்பிடறாங்கனு சொல்றீங்க!

மேலும் படிக்க | அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கியிருக்கிறீர்களா? தமிழ்நாடு அரசு குட்நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News