Thambidurai MP : முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் இல்லங்களில் அமலாக்கத்துறை ரைட் நடப்பது உறுதி. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறை சென்ற நிலை அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு ஏற்படுமோ என தோணுகிறது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை பேட்டி.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சபாநாயகர்மான தம்பிதுரை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் பேசுகையில்,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு பொதுக்குழு வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார் அதன்படி ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் உணர்வின் அடிப்படையில் தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமையில் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது., அதிமுக பாஜக உடனான கூட்டணி குறித்த அச்சத்தில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏதேதோ பேசி வருகிறார்., இந்த கூட்டணியால் தமிழகத்திற்கு ஏதோ ஆபத்து வந்ததாகவும் சிறுபான்மையினருக்கு ஆபத்து என்பது போன்று உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்.
அதிமுகவை பொருத்தவரையில் தமிழகத்திற்கு எப்போதெல்லாம் உரிமைகள் பறிபோகும் போதோ அல்லது குந்தகம் நேர்ந்தாலோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரு தெளிவான முடிவை எடுக்கும்., அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு, எனவும் அதிமுகவை பொறுத்தவரையில் வக்பு சட்ட எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு முன்மொழி கல்வி திட்டம் எதிர்ப்பு, டி லிமிடேஷன் திட்டம் எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்., திமுக மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் 10 ஆண்டு காலம் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்ததன் விளைவாகவே மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது எனவும் இதனாலேயே காங்கிரஸ் கட்சி காணாமல் போனது" என்றும் அவர் கூறினார்.
ஸ்டாலின், சபரீசன் வீட்டில் ரெய்டு:
மேலும், "மதுபான துறையில் சுமார் 39 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது அது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசிய நிலையில் அது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் கூற முன் வராமல் முழு பூசணிக்காயை மறைக்கப் பார்க்கிறார்., என்னை பொருத்தவரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உண்மையை பேசுபவர் அதனால் தான் ஊழல் செய்ததாக உயர் நீதிமன்றத்திலேயே உறுதிமொழி மனு தாக்கல் செய்து, ஊழல் பணத்தை அவர்களுக்கே மீண்டும் திருப்பி தந்ததாக ஒத்துக் கொண்டார்., ஆகையால் அப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி உண்மையை பேசும் பட்சத்தில் அந்தப் பணம் எங்கு சென்றது? யாருக்கு சென்றது என்பதெல்லாம் முதல்வருக்கு தெரியாமல் போகாது அந்த வகையில் எப்படி டெல்லியில் கெஜ்ரிவால் அவர்கள் சிறைக்கு சென்றாரோ அதே நிலை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஏற்படும்” என கூறினார்.
திமுகவில் பெண்களுக்கு எதிராகவும் ஆபாசமாக பேசக்கூடிய அமைச்சர்களையும் ஊழல் செய்யும் அமைச்சர்களையும் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துபவர் தான் ஸ்டாலின் என தெரிவித்தார்., ஏதோ அதிமுகவினர் வீட்டில் ரைடு நடப்பதாக கூறும் ஸ்டாலினிடம் நான் கேட்கிறேன் எங்கே நடக்கிறது ரைடு என்று கூறுங்கள் என கேள்வி எழுப்பிய அவர் அமைச்சர் நேரு இல்லத்திலும் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்திலும் தான் ரைடு நடைபெறுவதாக கூறினார்., விரைவில் சபரீசன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகிய வீட்டிலும் மதுபான ஊழல் குறித்த அமலாக்கத்துறை ரைடு நடப்பது உறுதி என அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பாலியல் வழக்கு: சிக்கினார் மத போதகர் ஜான் ஜெபராஜ்... மடக்கி பிடித்த கோவை போலீசார்!
மேலும் படிக்க | சுட்டு பிடிக்க உத்தரவா...? அதிர்ச்சியில் வரிச்சியூர் செல்வம் பேசியது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









