பொதுவாக ஏப்ரல் மாதம் தொடங்குபோது தான் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் இம்முறை பிரப்ரவரி மாதம் இறுதியில் இருந்தே வெப்பம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டியது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ஆனால் அவ்வபோது மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக இம்மாதம் பெய்த மழையால் வெப்பம் சற்று தனிந்தது. இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்த இந்த கோடை மழையால் வெப்பம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 18) தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கோவை, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இது தொடர்பாக வெளியிட்ட செய்திகுறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 24 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (18-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (19-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிங்க: தமிழ்நாட்டில் முதன்முதலாக வீடு தேடிச் செல்லும் ரேஷன் பொருட்கள்..! எங்கு தெரியுமா?
மேலும் படிங்க: இரு சக்கர வாகனம் வாங்க ரூ. 12,000 மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ