14 வயது சிறுமியை எரித்த காட்டுமிராண்டிகளை கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக தலைமை

14 வயது சிறுமியை மது போதையில் எரிந்துக்கொன்ற கொடூர மனித மிருகங்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய அதிமுக தலைமை.

Written by - Shiva Murugesan | Last Updated : May 12, 2020, 08:18 AM IST
14 வயது சிறுமியை எரித்த காட்டுமிராண்டிகளை கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக தலைமை title=

விழுப்புரம்: கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டை உலுக்கும் ஒரு சம்பவம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அரங்கேறியது. மது போதையில் இருந்த இருவர் (அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள்), தனது உறவினர் பெண்ணான 14 வயது சிறுமியின் கைகளை கட்டி, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்து தப்பி ஓடினார்கள். வீட்டில் இருந்து தீ புகை வருவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று, சிறுமியை காப்பாற்றி, உடலில் பெரிய தீக்காயங்களுடன் இருந்த சிறுமியை விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆனால் அங்கு சிக்கிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். அவர் இறக்கும் போது மரண வாக்குமூலம் அளித்துள்ளார். 

அதுக்குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரப்பரை ஏற்படுத்தியது. அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என #JusticeforJayashree என்ற ஹேஷ்டேக் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

காட்டுமிராண்டிகளால் எரித்துக்கொல்லப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் (52) மற்றும் கலியபெருமாள் (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, 302, 452, 341, 342, 294 பி, 323, மற்றும் 324 ஆகிய சட்டப்பிரிவின் (IPC) கீழ் வழக்கு பதிவு செயப்பட்டு உள்ளது.

இருவரும் ஆளும் அதிமுக (AIADMK) உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் முருகன் முன்னாள் கவுன்சிலரின் (Councillor) கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால், முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் அதிமுக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதுக்குறித்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது. 

மதுபோதையில் தகராது செய்த இருவர்:

ஜெயஸ்ரீ (Jayasree) தனது தந்தையுடன் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சிறுமாதுரை கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது தந்தை ஜெயபால் (Jayabal) அவர் வசிக்கும் பகுதியில் ஒரு சிறிய கடை வைத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, காலை, அங்கு வந்த முருகன் கடையை இப்பவே திறக்க வேண்டும் எனக்கூற ஜெயபாலின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த சமயம் ஜெயபால் வீட்டில் இல்லாததால், அவரது மகள் ஜெயஸ்ரீ கடையைத் திறக்க மறுத்து விட்டார். மிருகத்தனமான நிலையில் இருந்த முருகன், அந்த இடத்தை விட்டு அப்பொழுது  வெளியேறிவிட்டார்.

இரு கைகள் கட்டப்பட்ட நிலையில், உடலில் தீ வைக்கப்பட்டது:

சில மணி நேரம் கழித்து, வீட்டிலிருந்து புகை வெளியே வந்ததை பார்த்த, அக்கம்பக்கத்தினர் வீட்டை நோக்கி ஓடி உள்ளனர். அங்கு சிறுமி ​​ஜெயஸ்ரீ இரு கைகள் கட்டப்பட்ட நிலையில், அவரது உடல் தீயினால் எரிந்துக்கொண்டு இருதது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக தண்ணீர் ஊற்றி, அணைத்து சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (Villupuram Medical College Hospital) கொண்டு சென்றனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

தொடரும் முன்விரோதம்.. உயிரை பழிவாங்கியது:

முருகனும் ஜெயபாலும் உறவினர்கள். இருவருக்கும் முந்தைய விரோத வரலாறு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. "ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, முருகனும் அவரது நண்பர்கள் குழுவும் ஜெயபாலின் மாமாவின் கையை வெட்டினர். அந்த சம்பவத்தை அடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஆனால் இரு குழுக்களுக்கிடையில் நிலம் தொடர்பான மோதலும் ஏற்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக இரு குடும்பங்களுக்கும் இடையே அவ்வப்போது சின்ன சின்ன தகராறு ஏற்பட்டு வந்துள்ளது என்று மேலும் போலீஸ் அதிகாரி கூறினார்.

மரண வாக்குமூலம்: 

மேலும், உயிருக்கு போரட்டிக்கொண்டு இருந்த சிறுமி, இறப்பதற்கு முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், முருகன் மற்றும் யாசகன் என்ற காளியபெருமால் இருவரும் தான், தன் கைகளை கட்டி, என் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக ஜெயஸ்ரீ மாஜிஸ்திரேட்டுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். அவரது அறிக்கையின் அடிப்படையில், வில்லுபுரம் போலீசார் முருகன் மற்றும் காளியபெருமால் இருவரையும் கைது செய்துள்ளனர்.

வேற யாருக்காவது தொடர்பா?

அவர்கள் அதிமுக (AIADMK) உறுப்பினர்கள். ஆனால் குற்றம் யார் செய்தாலும், சட்டம் முன் நிறுத்தப்படுவார்கள். மேலும் குற்றத்தை நாங்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எஃப்.ஐ.ஆரும் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. வேற யாரவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா எனவும் விசாரித்து வருவதாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Trending News