139 சித்தா மருந்தாளுநர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் வைத்து, தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 139 சித்தா மருந்தாளுநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 


மேலும் உணவுப் பாதுகாப்புக்கான சுவஸ்த் பாரத் யாத்ராவில் சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழ்நாடு பெற்றதற்காக முதலமைச்சரிடம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து பெற்றார்.