SIR படிவம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்!

Last Date to Submit Voter SIR Form: SIR கணக்கீட்டு படிவம் சமர்ப்பிப்புக்கு நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (டிசம்பர் 14) நிறைவடைகிறது.   

Written by - R Balaji | Last Updated : Dec 14, 2025, 07:10 AM IST
  • எஸ்ஐஆர் (Special Intensive Revision)
  • படிவத்தை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
  • டிசம்பர் 19 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்
SIR படிவம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு எஸ்ஐஆர் (Special Intensive Revision) கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்த பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த பணியை டிசம்பர் 04ஆம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று (டிசம்பர் 14, 2025) ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. 

Add Zee News as a Preferred Source

SIR (Special Intensive Revision)

உங்கள் எஸ்ஐஆர் (Special Intensive Revision) கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள். அதனை தவறவிடும் பட்சத்தில், வரும் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாது. இதுவரை 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 221 கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில் இரட்டை பதிவு வாக்காளர்கள், உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என மொத்தமாக சுமார் 80 லட்சம் பேர் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் உண்மை தன்மையை கண்டறிந்து பட்டியலில் இணைக்கலாம் என முடிவு செய்து, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்ப்ய் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

வரும் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர் அதில் மேல்முறையீட்டை 2026 ஜனவரி 18ஆம் தேதி வரை வாக்காளர்கள் அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியலானது பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும்.  

இன்றே கடைசி நாள் 

SIR  விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 14, 2025) முடிவடைகிறது. எனவே SIR விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யவில்லை என்றால், உடனடியாக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர் உதவி மையம் அல்லது BLO-க்களிடம் சமர்ப்பிக்கவும். 

முக்கிய வேண்டுகோள் 

SIR கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை இனியும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டதால், மீண்டும் காலக்கெடுவை நீட்டிப்பது கடினமே. எனவே தாமதமின்றி இன்றே உங்கள் படிவத்தை சமர்ப்பிக்கவும்.

SIR பணியின் முக்கிய அம்சங்கள் 

கடைசி நாள்: இன்று (டிசம்பர் 14, 2025) ஞாயிற்றுக்கிழமை. 

பணி: வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் நீக்கப்படுவதை தவிர்க்க,  எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவத்தை உடனடியாக பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். 

வரைவு பட்டியல் எப்போது: வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. இதில் SIR கணக்கீட்டு படிவத்தை சமர்பித்தவர்களின் பெயர்மட்டுமே இடம்பெறும். நீங்கள் எஸ்ஐஆர்  படிவத்தை சமர்பிக்க தவறிவிட்டால், உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. 

மேலும் படிக்க: பெரியார் விருது, கபீர் புரஸ்கார் விருது : ரூ.5 லட்சம் பரிசு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மேலும் படிக்க: அரசு வேலைவாய்ப்பு : தேர்வு இல்லை, மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News