கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் எடை குறைவாக இருந்தாலோ, கூடுதல் விலை வாங்கப்பட்டாலோ கைபேசி செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 


விற்பனை செய்யப்படும் பொருட்களின் எடை சரியாக உள்ளதா, எடை போடும் எந்திரம் சரியாக இருக்கறதா என்பது குறித்து எடையளவு சட்ட விதிகளின் கீழ் மாதம்தோறும் சிறப்பு ஆய்வுகளை தொழிலாளர் துறையின் கீழ் உள்ள எடையளவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாதந்தோறும் முதல் மற்றும் 3-ம் வாரத்தில் இந்த ஆய்வுகள் நடக்கும்,


கடந்த மே மாதம் தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால் அறிவுறுத்தல்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1,330 கடைகளில் ஆய்வு நடத்தியதில், 289 நகைக்கடைகளில் தவறுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


856 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 46 முரண்பாடுகள் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி நோட்டுப் புத்தகங்கள், ஐஸ்கிரீம் விற்கப்படும் இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 56 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 46 முரண்பாடுகள் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


பொட்டலப் பொருட்களின் மீது சட்ட ரீதியான அறிவிப்புகள் இல்லாதது, அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு மேல், அதிக விலைக்கு விற்பனை செய்வது, விற்பனை செய்யப்படும் பொருட்களின் அளவு குறைவாக காணப்படுவது போன்ற முரண்பாடுகள் தொடர்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள ‘TN-LMCTS’ என்ற கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் புகார் அளித்து நுகர்வோர் நிவாரணம் பெறலாம்.