சிறிய காயம் பெரிய துயரம் – சிலம்பாட்டுப் பதக்க வீராங்கனை தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்

சிலம்பட்டாத்தில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற பள்ளி மாணவிக்கு கையில் ஏற்பட்ட சிறிய காயத்தால் சிலம்பம் சுற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 6, 2025, 05:37 PM IST
  • 8ஆம் வகுப்பு படித்துவந்த போதே சிலம்பம் பழகி மாவட்ட அளவில் பரிசு வாங்கியுள்ளார்.
  • மருத்துவரிடம் ஆலோசித்தபோது ஜவ்வு விலகியுள்ளது என கூறியுள்ளனர்.
சிறிய காயம் பெரிய துயரம் – சிலம்பாட்டுப் பதக்க வீராங்கனை தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்

மதுரை மாநகர், சொக்கநாதபுரம், விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் ராமர் - கற்பகம் தம்பதியினர். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகளான தான்யலெட்சுமி, கோரிப்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Add Zee News as a Preferred Source

தான்யலெட்சுமிக்குச் சிறு வயதிலிருந்தே சிலம்பம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. 8-ஆம் வகுப்பு படிக்கும்போதே சிலம்பம் கற்று, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பல பதக்கங்களையும் பரிசுகளையும் வென்றுள்ளார். தேசிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் சிலம்பத்தில் பல்வேறு ஆசனங்களைக் கற்று சிறப்பாக விளையாடி வந்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தான்யலெட்சுமியின் வலது கையில் மணிக்கட்டு அருகே திடீரென வலி ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் ஜவ்வு விலகல் எனக் கண்டறியப்பட்டு, மாவுக்கட்டு போடப்பட்டது. சிறிது நாட்களில் இரு கைகளிலும் வலி ஏற்பட்டதால், அவரால் சிலம்பம் சுற்றவோ, பேனா பிடித்துத் தேர்வு எழுதவோ முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

சமீபத்தில் மதுரை திருமங்கலத்தில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்துகொண்டு, மூன்றாவது பரிசைப் பெற்றார். அப்போது, கையால் வலி காரணமாகத் தன்னுடைய பாணியில் ஆட முடியவில்லை என்று கூறி கண்ணீர்விட்டு அழுதார். வலி இல்லையென்றால் முதல் பரிசு பெற்றிருக்கலாம் என்ற வருத்தத்தில், அந்த மூன்றாவது பரிசைக் கூட அவர் பெறவில்லை.

கடந்த ஒரு மாத காலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஒரு வாரமாக ஹோமியோபதி மாத்திரைகள் எடுத்துள்ளார். சில நாட்களாகக் கை வலி அதிகமானதால், சிலம்பம் சுற்ற முடியவில்லையே என்று மன வருத்தத்தில் இருந்துள்ளார். சிலம்பாட்டத்தில் சாதித்து அதன் மூலம் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற தனது கனவை அடிக்கடி பெற்றோரிடமும் சகோதரியிடமும் கூறி வந்துள்ளார். பெற்றோரும் சகோதரியும் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில், நேற்று (குறிப்பிட்ட நாள்) பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், சகோதரியும் வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி தான்யலெட்சுமி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேசிய அளவில் பரிசுகளை வென்ற மாநகராட்சிப் பள்ளி மாணவி, சிறு காயத்தால் சிலம்பம் ஆட முடியாமல் போன மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உதவி தேவைப்படுபவர்களுக்கான முக்கிய தகவல்:

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது மன அழுத்தத்தில் அல்லது தற்கொலை எண்ணங்களுடன் இருந்தால், தயவுசெய்து உதவிக்கு அழையுங்கள்.

(வாசகர்கள் கவனத்திற்கு: தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்)

மேலும் படிக்க - கிருஷ்ணகிரி டூ மதுரை: இன்று 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்!

மேலும் படிக்க - வார விடுமுறை.. 900 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க - நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News