சவாலான தொகுதி... முதல்வரின் துணிச்சலான முடிவு: தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் புகழாரம்
Lok Sabha Elections: கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த ஒரே தொகுதி தேனி தொகுதி திமுக எளிதில் ஜெயிக்க கூடிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து சவாலான தேனி தொகுதியை தளபதி ஸ்டாலின் எடுத்துக் கொடுத்துள்ளார்.
Lok Sabha Elections: இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் என நாடே களைகட்டியுள்ளது. தமிழகத்திலும் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. கட்சிகள் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், தேனி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக கட்சியின் சார்பில் அக்கட்சியின் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் போடிக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வனை திமுக நகர் கழகத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தேவர் சிலை முன்பாக மேளதாளங்களுடன், பட்டாசுகள் வெடித்து மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
பின்பு தேவர் சிலைக்கு மாலை அணிவித்த தங்க தமிழ்ச்செல்வன் திமுக கட்சியின் காரியாலயத்தை திறந்து வைத்தார்.
பின்னர் தொண்டர்கள் இடையே பேசிய தங்க தமிழ்ச்செல்வன், "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் தேனி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அதன் வேட்பாளர் கடந்த முறை தோல்வி அடைந்தார்.
மேலும் படிக்க | பாமக வேட்பாளர்களில் 30% மகளிர்; 20% பட்டியலினம்... இது தான் சமூகநீதி!
இதனால் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சவாலான பாராளுமன்ற தொகுதியான தேனியை திமுக எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். மேலும் அவர் காங்கிரஸ் கட்சியிடம் இதை தெரிவித்ததோடு, உங்களுக்கு எந்த தொகுதி வேண்டும் என கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியை ஒதுக்கீடு செய்தார்" என்று கூறினார்.
"எனவே இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தேனியை திமுக கைப்பற்ற கட்சியினர் உழைக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த ஒரே தொகுதி தேனி தொகுதி. திமுக எளிதில் ஜெயிக்க கூடிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து சவாலான தேனி தொகுதியை தளபதி ஸ்டாலின் எடுத்துக் கொண்டுள்ளார் என போடி திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் கட்சியினரிடம் தங்கத்தை செல்வன் பெருமையாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | தமிழகத்திற்கு மோடி 100 முறை வந்தாலும் பாஜக மண்ணை தான் கவ்வும் - திமுக
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ