அதிமுகவோடு கூட்டணி சேர்வதில் பிரச்னையில்லை - திருமாவளவன் பேச்சு!

அதிமுகவோடு  கூட்டணி சேர்வதில் பிரச்னையில்லை. ஆனால் அதிமுக வோடு பிஜேபி இருப்பதால் சேர முடியவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் பேசியுள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2025, 10:33 AM IST
  • வெளிப்படையாக முடிவெடுத்து சொல்கிறோம்.
  • பிஜேபி, பாமக உள்ள அணிகளில் ஒரு போதும் சேரமாட்டோம்.
  • விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் பேச்சு.
அதிமுகவோடு  கூட்டணி சேர்வதில் பிரச்னையில்லை - திருமாவளவன் பேச்சு!

மதுரையில் நடைபெற்ற முடக்கத்தான் பாண்டியரின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,"வி.சி.க 4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்களை பெற்று பானை சின்னத்தை சொந்தமாக்கி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்து அனைத்து தரப்பு மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்து வருகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகப்பெரிய ஒரு துருப்புச்சீட்டாக உள்ளது. எவ்வளவு சீட்டு கேட்கப் போகிறீர்கள்? எவ்வளவு சீட்டு கிடைக்கும்? சீட்டு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுக்கும் திமுகவுக்கும் அடிக்கடி உரசல் வருகிறதே? நாள்தோறும் தேர்தலை பற்றி கேள்வி கேட்கிறார்கள். ஆளுங்கட்சியோடு கூட்டணியில் இருந்தால் உரசல்கள் வர தான் செய்யும். எதிர்க்கட்சியோடு இருந்தால் பிரச்னை வராது. 

மேலும் படிங்க: தமிழகத்தில் நாளை வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வும் மையம்!

காவல்துறை, வருவாய்துறையோடு பிரச்னை வைத்துக்கொண்டால் பிரச்னை வரும். ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும்போது நெருக்கடி இருப்பது உண்மை தான். மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசியல் கட்சி கொடிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். இது காவல்துறைக்கும், வருவாய்துறைக்கும் திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிட்டது.எந்த கட்சியின் கொடியை அகற்றினார்களோ இல்லையோ?  விடுதலை சிறுத்தை அகற்றுகிறார்கள். தமிழகம் முழுவதும் JCB வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை அகற்றுகிறார்கள். அவ்வளவு காழ் புணர்ச்சி அதிகார வர்க்கத்திடம் மேலோங்கி இருக்கின்றது. இதையெல்லாம் சமாளித்து, போராடிக்கொண்டு தான் ஆளுங்கட்சி கூட்டணியில் நீடிக்கின்றோம்.

அரசியல் களத்தில் நாம் நிற்கும்போது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு தான் ஒரு முடிவு செய்ய முடியும். தமிழக அரசியல், அகில இந்திய அரசியல், அம்பேத்கர் அரசியல்,பெரியாரின் அரசியல் தமிழ்நாட்டு மக்கள் நலன், தலித்துகளின் நலன் தமிழ்நாட்டின் மக்கள் நலன், தமிழ்நாட்டு மக்களின் நலன் எவ்வளவு முக்கியமோ அதுபோல அகில அளவில் விளிம்பு நிலை மக்களின் நலன் முக்கியம். அரசியலில் நிதானம், சகிப்புத் தன்மை, பொறுமை தேவை.நமக்கு ஆதரவான சக்திகள் யார் என்று அடையாளம் காண்பதில் தெளிவு தேவை.கொள்கை அடிப்படையில் நம் எதிரி யார் என்பதை முடிவு செய்கின்ற துணிவு தேவை.
அதனால் வெளிப்படையாக முடிவெடுத்து சொல்கிறோம்.பிஜேபி, பாமக உள்ள அணிகளில் ஒரு போதும் சேரமாட்டோம்.அதிமுக வோடு சேர்வீர்களா? என்று கேட்டால். 

சேருவோம், பிரச்னையில்லை. ஆனால் அதிமுக வோடு பிஜேபி இருப்பதால் சேர முடியவில்லை.
இங்கேயும் திறந்து வைத்துவிட்டு அங்கேயும் திறந்து வைத்து விட்டால் தானே பேரம் பேச முடியும். இங்கே தரவில்லை என்றால் அங்கே சென்று விடுவேன் என்று மிரட்டி தானே அரசியல் செய்ய வேண்டும் என்பார்கள்.அப்படி ஒரு அரசியல் எங்களுக்கு தேவையில்லை நான் அதற்காக கட்சி நடத்தவில்லை.மக்களுடைய அரசியலை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஜீரோவில் இருந்த போதே தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள். இன்று காலை தினகரன் நாளிதழில் மூன்றாவது காலத்தில் திருச்சியில் பேரணி என்று ஒரு சின்ன செய்தி வந்துள்ளது. ஒரு மாஸ் எல்லாம் இல்லை. இத்தனைக்கும் கூட்டணி கட்சியிலுள்ள ஒரு பத்திரிக்கை,ஆளும் கட்சியின் ஆதரவாக இருக்க கூடிய பத்திரிகை அதில் வரவில்லை. இதே சினிமா நடிகைகள் என்றால் முதல் பக்கத்தில் இருக்கும்.மதவாதம் பேசுபவர்களிடம் நம் கவனமாக இருக்க வேண்டும்.நாமெல்லாம் இந்து, நாமெல்லாம் முருக பக்தர்கள் என்று அழைப்பார்கள்.

கள்ளழகர் பக்தர்களின் அழைப்பார்கள். இதுபோல் கடவுளின் பெயரால்,மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியம் என்கிற  பெயரில் பெரியாரியத்தை  எதிர்க்கும் சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அம்பேத்கருக்கும், பெயருக்கும் ஒரு Thickest ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது. பெரியாரை கன்னடர் என்று விமர்சனம் செய்தவர்கள், அம்பேத்கரை மராட்டி ரெண்டு சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? மொழி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தலாமா? தலைவர்களை இப்படி கொச்சைப்படுத்தலாமா? பெரியார் எதிர்ப்புடன் பேசக்கூடிய தமிழ் தேசியம் மிகவும் ஆபத்தானது.  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் .இடதுசாரிகளின் அரசியல் தான் விசிக வின் அரசியல். 

சமூக நிதியின் அரசியல் தான் விசிக வின் அரசியல், தேசிய அளவில் புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் தான் இன்று விவாதிக்கப்படுகிறது.அம்பேத்கரை முழுமையாக படிப்பதால் தான் மதச்சார்பின்மையை முழுமையாக புரிந்து கொள்ள முடிகின்றது.அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் சதி முயற்சிகள் நடைபெற்று வருகிறது. நீல நிற கோட் சூட் போட்டவுடன் எல்லோரும் கிண்டல் அடித்து எல்லி நகையாடுகிறார்கள். ஏன் நாங்கள் எல்லாம் கோட் சூட் போட கூடாதா? டீக்கடை, ஆட்டோ ஓட்டுநர்கள் போடக்கூடாதா? நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள், கொள்கையில் மட்டுமல்ல உடைகளும் அவரை பின்பற்றுவோம்" என்றார்.

மேலும் படிங்க: Special Bus: சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News