திருவள்ளூர் அடுத்த வயலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிர்வாகி ராஜா என்பவரின் வீடு கிரகப்பிரவேச நிகழ்வில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் ரிப்பன் வெட்டி வீட்டை திறந்து வைத்தார். முன்னதாக ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 15 அடி உயர மாலை அணிவித்தும் மலர் தூவியும் தொல் திருமாவளவனிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா மட்டுமே கூட்டணி ஆட்சி என அறிவித்து வருகிறார். இது பாஜக தலைமையிலான கூட்டணியா அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணியா என்பதை எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களுக்கு கூற வேண்டும்.
ஒர் ஆண்டுக்கு முன்பாகவே அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டார்கள். என்ன அவசரம். என்ன அழுத்தம் என்று தெரியவில்லை. இதற்கான காரணத்தை அதிமுக தான் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்ட பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த கூட்டணிக்கு செல்லுமா என்ற கேள்வியே தேலையற்றது என்று கூறினார்.
தொடர்ந்து கோயமுத்தூர் வால்பாறை பகுதியில் குழந்தையை சிறுத்தை கொன்ற விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, இறப்பு மிகுந்த துயரத்திற்குரியது இந்த குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அமைச்சர் எந்தப் பின்னணியில் இந்த கருத்தை சொன்னார் என்பது தெரியவில்லை. நடப்பது வழக்கம் என்றாலும், மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது தமிழக அரசுக்கு குறிப்பாக அமைச்சருக்கு உரிய கடமையாகும். வருங்காலங்களில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதும் வனவிலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும், பாமக குறித்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என கூறி சென்றார்.
மேலும் படிங்க: அரசு பள்ளிகளில் வரும் புதிய திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
மேலும் படிங்க: திமுக கூட்டணியில் பாமக..? செல்வப்பெருந்தகை பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









