பகல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு எதிராக போரிடக் கூடாது... திருமாவளவன் விளக்கம்

Tamil Nadu News: பகல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் பேசி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 25, 2025, 03:35 PM IST
  • யுத்தம் தேவையில்லாதது, பாகிஸ்தானை அந்நியப்படுத்தலாம் - திருமா
  • அமித்ஷா பதவி விலக வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம் - திருமா
  • நம்முடைய வலிமையை வேறு நாட்டின் மீது நிரூபித்து காட்டக்கூடாது - திருமா
பகல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு எதிராக போரிடக் கூடாது... திருமாவளவன் விளக்கம்

Tamil Nadu Latest News Updates: திருச்சியில் திராவிடர் கழகம் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்பதற்காக வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Add Zee News as a Preferred Source

Tamil Nadu News: 'ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே'

ஜாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்தியர் என உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். ஆனால் இந்தியாவில் ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பகை வளர்த்து ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள், அதுதான் கசப்பான உண்மை.

மத நல்லிணக்கம் தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு தேவை என்பதை சங்பரிவார்கள் இந்த சூழலிலாதாவது புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என கூறுவதில் எங்களுக்கு எந்த அரசியல் ஆதாயம் இல்லை, ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே.

Tamil Nadu News: 'மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்'

370 சட்டப்பிரிவை நீக்கினால் ஜம்மு காஷ்மீரில் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் இருக்காது என பாஜக அரசு திரும்பத் திரும்ப கூறி வந்தது. அங்கு சுற்றுலா செல்லலாம் என்கிற அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டது. அதனை நம்பி மக்கள் அங்கு சுற்றுலா சென்ற போது இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் பதவி விலகி முன்மாதிரியாக விளங்கினார். இந்த நிலையில்தான், அமித்ஷா பதவி விலக வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். மீண்டும், மீண்டும் அதை வலியுறுத்துவோம். விசிக சார்பில் வக்ஃபு  சட்டத்தை கண்டித்து வரும் மே 31ஆம் தேதி திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

Tamil Nadu News: ஆளுநர் ரவிக்கு இது அழகல்ல...

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் முரண்பாடுகள் கூர்மை அடைந்துள்ளன. 
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அவர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருவதாக எல்லோரும் உணரப்பட்டது. துணைவேந்தர்களுக்கும் நெருக்கடி உருவாகியது. அந்த நெருக்கடியை ஆளுநர் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார். இன்று துணைவேந்தர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்து உள்ளார்கள். ஆளுநர் ஆர் என் ரவியின் இது போன்ற செயல்பாடுகள் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.

Tamil Nadu News: பாகிஸ்தானுக்கு எதிராக போர் கூடாது
 
காஷ்மீரில் நடந்த தாக்குதல் இருநாட்டிற்கும் போராக மாறிவிடக்கூடாது. பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு நாடு பொறுப்பு என பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக் கூடாது. நம்முடைய வலிமையை வேறு நாட்டின் மீது நிரூபித்து காட்டக்கூடாது. அது உலக நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது.

Tamil Nadu News: பயங்கரவாதத்தை தீவிரப்படுத்தி உள்ளது

இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் இந்தியாவில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படவில்லை. மாறாக அதை தீவிரப்படுத்துவதற்கு தான் பயன்பட்டுள்ளது என்பது காஷ்மீரில் தற்போது நடந்துள்ள தாக்குதல் தெளிவுபடுத்தி உள்ளது. பயங்கரவாதிகள் ஜாதி மதம் என எதையும் பார்க்க மாட்டார்கள்.

காஷ்மீரில் நடந்த தாக்குதல் மதத்தை பார்த்து நடந்த தாக்குதல் போல் தெரியவில்லை. இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. காஷ்மீருக்கு வரும் பொது மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை உள்ளது உள்ளபடியே புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்த வித கற்பிதமும் தேவையில்லை" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | பெண்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்: மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசு அப்டேட்

மேலும் படிக்க | மீண்டும் சலசலப்பு! தமிழக ஆளுநர் நடத்தும் மாநாட்டை புறக்கணித்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!

மேலும் படிக்க | 'மோடி எதுவுமே செய்ய மாட்டார்... உங்களை தூங்க வைத்துவிடுவார்' - சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News