புதுடில்லி: மதிப்புமிக்க அறிஞர்கள் மற்றும் கவிஞர்களின் விலைமதிப்பற்ற இலக்கியங்களையும் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டவும் பல முறை பல முன்முயற்சிகளை எடுத்துள்ள பிரதமர் மோடி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15 ஆம் தேதி அவரைப் பற்றிய தனது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டார். திருக்குறளை இயற்றியவரும், மிகவும் சக்திவாய்ந்த சரித்திர ஆளுமையுமான திருவள்ளுவரின் சக்திவாய்ந்த கருத்துகள் மற்றும் தத்துவங்கள் பல தலைமுறைகளாக நிலைத்து நிற்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி தனது சமூக ஊடக இடுகையில், திருவள்ளுவரின் பணி மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் அவரது இலக்கியத்தை படித்து, அதில் உள்ள அபரிமிதமான அறிவையும் ஞானத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



வெள்ளியன்று தமிழ் தத்துவஞானியான திருவள்ளுவருக்கு (Thiruvalluvar) அஞ்சலி செலுத்திய பிரதமர், “வள்ளுவரின் கொள்கைகளும் நோக்கமும் அனைத்து தலைமுறையினருக்கும் பொருந்தும். அவரது படைப்புகள் மக்கள் மற்றும் சமூகத்தில் சாதகமான தாக்கத்தை உருவாக்குகின்றன” என்று கூறியுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi) சில பாஜக தலைவர்களும் தமிழகத்தில் வாக்குகளை வென்றெடுப்பதற்காக திருவள்ளுவரின் புகழ் பாடி வருவதாக சில எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், பிரதமரின் இந்த கருத்துகள் வெளிவந்துள்ளன. இருப்பினும், ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பூ சுந்தர், “திருவள்ளுவருடனான மோடியின் பிணைப்பு மிகவும் ஆழமானது. திருக்குறளின் விரிவான மற்றும் பரந்த நோக்கங்களும் அம்சங்களும் பிரதமரை ஈர்த்துள்ளன. பல்வேறு மொழிகளைச் சார்ந்த கவிஞர்களுக்கு ஆதரவளிப்பதற்காக எதிர்க்கட்சி தொடர்ந்து பிரதமர் மீது ஆதாரமற்ற விமர்சனங்களை வைக்கலாம். ஆனால், திருக்குறளின் மூலம், இந்தியத்தன்மையின் அம்சத்தை பிரதமர் மோடி எடுத்துக்காட்டியுள்ளார்” என்று கூறினார்.


ALSO READ: திருக்குறளை பரப்பும் சர்தார்ஜி: 1330 குறள்களையும் பனை ஓலையில் பொறித்தார்


திருவள்ளுவரைப் பற்றி பிரதமர் மோடி பேசுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜூலை 3, 2020 அன்று, கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் COAS நார்வானேவுடன் ராணுவத் தளங்காளை மறுஆய்வு செய்ய பிரதமர் லடாக்கிற்கு (Ladakh) விஜயம் செய்தபோது, ​​படையினரிடம் உரையாற்றியபோது, ​​அவர் இந்த குறளை தமிழில் மேற்கோள் காட்டினார்:


‘’ மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்


எனநான்கே ஏமம் படைக்கு’’


'வீரம், மரியாதை, கண்ணியமான நடத்தை மற்றும் நம்பகத்தன்மை ஆகிய நான்கு குணங்களும் எந்த ஒரு நாட்டின் இராணுவத்தையும் பிரதிபலிக்கும் நான்கு குணங்களாகும்’ என்பது இக்குறளின் பொருளாகும். இந்திய இராணுவம் எப்போதும் இந்த பாதையை பின்பற்றி வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.


2020 ஆம் ஆண்டில் மட்டும் பிரதமர் திருவள்ளுவரின் திருக்குறளை (Thirukkural) 10 முறை மெற்கோள் காட்டினார். திருக்குறளின் உள்ளடக்கம் பெரும்பாலும் நல்லொழுக்கம், தர்மம், செல்வம் மற்றும் அன்பு பற்றிய போதனைகளைக் கொண்டிருக்கிறது. திருக்குறள் நெறிமுறைகள் மற்றும் அறநெறி குறித்த மிகப் பெரிய படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 


ALSO READ: பொங்கல் பண்டிகை: தமிழகத்தில் 2 நாள் டாஸ்மாக் வசூல் ரூ.417.18 கோடி!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR