)
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தூய்மைப் பணியாளர்களின் பிரச்னையில் ஆரம்பத்தில் இருந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுத்து வருகிறது. தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்ப நடைமுறை. அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக. கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம். அதே சமயம் தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
திமுக கூட்டணி உடைக்க முயற்சி
ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் 4 மண்டலங்கள் மட்டுமே உள்ளன. அதில் 2 மண்டலங்களை தனியார் மயமாக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும். தூய்மை பணியாளர்களின் பிரச்சனையை வைத்து சிலர் திமுக கூட்டணியை உடைக்க பார்க்கிறார்கள் என கூறினார்.
ஜிஎஸ்டி குறைப்பு
இன்று (ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திபாவளிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என்றும் ஐஎஸ்டி வரியை குறைக்க உள்ளதாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு மகழ்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய தொல். திருமாவளவன், ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கைவிட வேண்டும். தேர்தலுக்காக இந்த அறிவிப்பு இருந்தாலும் மக்களுக்கு பயன்தரும் என்பதால் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம். மேலும், சுதந்திர தின விழாவில் ஆர்எஸ்எஸ்-ஐ பிரதமர் பாராட்டி பேசியுள்ளது ஏற்புடையதல்ல." இவ்வாறு அவர் பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ