RSS-ல் பயிற்சி.. தேர்தல் ஆணையத்தில் பதிவி - திருமாவளவன் குற்றச்சாட்டு!

Thol Thirumavalavan Press Meet: RSS-ல் பயிற்சி பெற்றவர்களே இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தின் அதிகார்களாக இருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறி உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Nov 11, 2025, 02:39 PM IST
  • சென்னையில் SIRக்கு எதிராக போராட்டம்
  • தேர்தல் ஆணையத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள்
  • தொல் திருமாவளவன் பேட்டி
RSS-ல் பயிற்சி.. தேர்தல் ஆணையத்தில் பதிவி - திருமாவளவன் குற்றச்சாட்டு!

Thol Thirumavalavan About SIR: சென்னை, தங்கசாலை மணிகுண்டு அருகே இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் சீராய்வு  (SIR) கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (நவம்பர் 11) நடைபெற்றது  இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல கட்சிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Add Zee News as a Preferred Source

திமுக சார்பில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகர மேயர் பிரியா, விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல் திருமாவளவன், மதிமுக சார்பில் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சண்முகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எஸ் ஐ ஆர் குறித்து மேடையில் பேசினர். 

RSS-ல் பயிற்சி பெற்றவர்களே அதிகாரிகளாக உள்ளனர்

இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் ஆணையம் பாஜக ஆட்சியாளர்களின் முழு கட்டுப்பாட்டிற்கு போய்விட்டது. அது சுதந்திரமாக செயல் படவில்லை. ஆர்எஸ்எஸ்-இல் பயிற்சி பெற்றவர்களே அந்த ஆணையத்தின் அதிகாரிகளாக இருக்கிறார்கள்.  

நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையாக கூற முடியாது. ஏனென்றால் தாங்கள் விரும்பும் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தையே உத்தரவிட வைப்பார்கள். அதற்கு சான்று பாபர் மசூதி இடிப்பு விவகாரம். அதில் அவர்கள் விரும்பிய திர்ப்பையே உச்சநீதிமன்றத்தை வழங்க வைத்தார்கள். ஆகவே கடைசி நம்பிக்கையாக இருக்கும் உச்ச நீதிமன்றத்தையே சந்தேக நிழல் படும் நிலைமையை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 

பாஜக பிரதிநிதி எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைவராக இருந்து இந்த கருத்தை சொல்லுகிறாரா அல்லது பாஜகவின் பிரதிநிதியாக இருந்து இந்த கருத்தை சொல்லுகிறாரா என்ற குழப்பம் உருவாகிறது தேர்தல் அரசியலுக்காக தன்னுடைய சுயத்தை இழக்கும் நிலைக்கே அதிமுக தள்ளப்பட்டு இருக்கிறதோ என்ற கவலை இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி.. வேலூரில் சோகம்!

மேலும் படிக்க: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ; தகுதியான பெண்கள் யார்? முதலமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News