)
தூத்துக்குடியில் தனியார் மரைன் ஷிப்பிங் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த சந்தனராஜ் என்பவர் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கடந்த 25 ஆம் தேதி இரவு பணியில் இருக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடலில் செத்து மிதந்த அவரது உடலை மீட்டு மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் சந்தன ராஜ் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் உரிய இழப்பீடு வழங்க கோரி குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் தூத்துக்குடி பழைய துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி போல்டன் புரம் மூன்றாவது தெரு பகுதியை சேர்ந்தவர் சந்தன ராஜ் இவர் ஹரி அண்ட் கோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள தஸ் நேவிஸ் மரைன் ஷிப்பிங் என்ற நிறுவனத்தில் மேலாளராக கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக இவர் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் சரக்கு கொண்டு செல்லும் சிறிய ரக கப்பல் போன்ற பார்ச்களில் பழுது பார்க்கும் பணியை மேற்பார்வை செய்து வருவார்.
அந்த வகையில் கடந்த 25 ஆம் தேதி இரவு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் ஒரு பார்ச்சில் வெல்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும்போது அந்த பணியை பார்வையயிடுவதற்காக சந்தனராஜ் சென்றுள்ளார் ஆனால் அங்கு அவர் நின்று கொண்டிருக்கும் போது திடீரென மாயமாகி கடலில் சந்தன ராஜின் உடல் மிதந்துள்ளது. இதைத் தொடர்ந்து அருகே இருந்த ஊழியர்கள் சந்தனராஜை காணவில்லை என தேடத் துவங்கியுள்ளனர் இதில் கடலில் மிதந்த கடந்த சந்தன ராஜன் உடலை மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் அங்கு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தனராஜ் எப்படி இறந்தார் என்பது தெரியாமல் உள்ளது அவர் மின்சாரம் தாக்கி கடலில் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் அல்லது கடலில் காற்று காரணமாக கீழே விழுந்து இறந்தாரா என்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் அவர் பணியாற்றிய நிறுவனம் சார்பில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அழிக்கப்படாததே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சந்தன ராஜின் மனைவி திலகராணி மற்றும் உறவினர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தனராஜ் மரணத்திற்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் மேலும் தனியார் நிறுவனம் சார்பில் சந்தனராஜ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி அவரது உடலை கடந்த நான்கு நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் துறைமுக சபை நிர்வாகம் வேலை பார்த்த நிர்வாகம் ஆகியவை உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை மேலும் முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி பழைய துறைமுகம் முன்பு சந்தன ராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பழைய துறைமுக தந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் துறைமுக ஆணைய நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட சந்தனராஜ் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் அவரது மனைவிக்கு துறைமுகத்தில் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.