)
Thoothukudi MP Kanimozhi Karunanidhi News: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) விதிகளில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த திருத்தங்களை திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி (MP Kanimozhi Karunanidhi) கடுமையாக விமர்சித்தார். அவை "கொடூரமானவை, அநீதியானவை, உழைக்கும் மக்களுக்கு எதிரானவை" என்று அவர் கூறியுள்ளார். வருங்கால வைப்பு நிதியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் என்ன? புதிய வருங்கால வைப்புநிதி விதிகள் என்ன? எம்.பி. கனிமொழி கருணாநிதி எதிர்க்க என்ன காரணம்? போன்ற விவரங்களை பார்ப்போம்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் புதிய வருங்கால வைப்புநிதி (Provident Fund - PF) விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை பணியாளர்களுக்கு தங்கள் PF கணக்கில் உள்ள முழு தொகையையும் எடுக்க அதிகமான சலுகைகளை வழங்குகின்றன. அதே நேரத்தில் இது கொடூரமானது உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
வருங்கால வைப்பு நிதி திட்டம் அதாவது இபிஎஃப்ஓ-வில் (EPFO) இருந்து பிஎப் பணத்தை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. அதில் முன்பிருந்த விதிகளை தளர்த்து 100% வரை பணத்தை எடுக்க அனுமதிக்கும் புதிய திட்டத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது முன்னதாக திருமணம் மற்றும் கல்விக்கு மொத்தம் மூன்று முறை மட்டுமே பகுதி அளவு பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை தளர்த்தி புதிய திட்டத்தின் மூலம், திருமணம், கல்வி போன்ற தேவைகளுக்கான பணம் எடுக்கும் வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கல்விக்கான வரம்பு 10 மடங்காகவும், திருமணத்திற்கான வரம்பு 5 மடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பகுதியளவு பணம் எடுப்பதற்கும் குறைந்தபட்ச சேவை காலம் 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. நெருக்கடி சூழ்நிலைகளில் பணம் எடுப்பதற்கான காரணங்களை இனி சந்தாதாரர்கள் விளக்க தேவையில்லை. உறுப்பினர்களின் கணக்கில் 25% பங்களிப்பு குறைந்தபட்ச இருப்பு தொகை கணக்கில் இருப்பது கட்டாயம். ஆவனைகள் எதுவும் சமர்ப்பிக்காமலேயே 100% தானியங்கி முறையில் பகுதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
முதிர்வு பெறாத இறுதி செட்டில்மென்ட் எடுக்கும் காலக்கேடு 2 மாதத்திலிருந்து 12 மாதமாகவும், ஓய்வூதிய இறுதி செட்டில்மென்ட் 2 மாதத்திலிருந்து 36 மாதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மூலம் உறுப்பினர்கள் தங்கள் உடனடி நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதோடு, ஓய்வூதிய சேமிப்பிலும் சமரசம் செய்யாமல் பார்த்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 100% பி.எப் தொகையை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- முன்பு திருமணம் மற்றும் கல்விக்கான பங்குதொகை எடுக்கும் வரம்புகள் மிகவும் குறைவாக இருந்தன; இவை தற்போது பெரிதும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
- குறைந்தபட்ச சேவை காலம் 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது (முன்பு Not specified).
- சிறப்பு நெருக்கடி சூழ்நிலைகளில் புது ஆவணங்களை சமர்ப்பிக்காமல் பணம் எடுக்க முடியும்.
- கணக்கில் 25% பங்களிப்பு தொகை குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்.
- முதிர்வு பெறாத இறுதி செட்டில்மென்ட் மற்றும் ஓய்வூதிய இறுதி செட்டில்மென்ட் எடுக்கும் காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன:
இந்த நிலையில் புதிய இபிஎப்ஓ விதிகளுக்கு திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய பாஜக அரசின் புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு விதிகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் பிஎப் தொகையை முன்கூட்டியே எடுப்பதற்கு குறைந்தபட்ச வேலையின்மை காலத்தை இரண்டு மாதங்களில் இருந்து ஒரு முழு ஆண்டாக உயர்த்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் சொந்த சேமிப்பில் 25% தொகையை ஓய்வூதியம் பெறும் வரை எடுக்க முடியாமல் முடக்குவது மற்றும் ஓய்வூதிய தொகையை எடுப்பதற்கு காலதாமதம் செய்வது ஆகியவை கொடூரமானது அநியாயமானது.
லட்சக்கணக்கான மக்கள் வேலை இழப்பு மற்றும் விளைவாசி உயர்வால் சிரமப்படும் போது, இந்த கடினமான முடிவானது மத்திய அரசுக்கு இந்திய மக்கள் மீது அக்கறை இல்லை என்பதையும், நடுத்தரவர்க்கத்துடன் அதற்கு தொடர்பில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது.
கடினமான காலங்களில் தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக அவர்களின் பணத்தை பூட்டி வைப்பது மனிதாபிமானமற்றது என கூறிய எம்.பி. கனிமொழி, இந்த மக்கள் விரோதம் மற்றும் கொடூரமான விதிமாற்றங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
பொருளாதாரத் தவறான நிர்வாகத்திற்காக ஊழியர்களை அரசாங்கம் தண்டிப்பதாக எதிர்க்கட்சிகள் பெருமளவில் குற்றம் சாட்டியுள்ளன, மேலும் புதிய விதிகளை தொழிலாளர்களின் சொந்தப் பணத்தை நிதி ரீதியாக முடக்குவதற்கான ஒரு வடிவம் என்று வர்ணித்துள்ளன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது என்பதைக்காட்டுகிறது.
இந்த புதிய வருங்கால வைப்புநிதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட விதிகள் தொழிலாளர்களுக்கு நிதி வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டாலும், அவை சமூக மற்றும் அரசியல் ரீதியாக பெரும் எதிர்ப்பையும் ஏற்பட்டுள்ளன. தொழிலாளர் நலத்துறையின் நோக்கம் உடனடி நிதி தேவைகளை பூர்த்தி செய்வதும், ஓய்வூதிய சேமிப்பை பாதிக்காமல் இருப்பதும் ஆகும். ஆனால், பல்வேறு கடுமையான விதிகள் மற்றும் காலக்கெடுக்களின் நீட்டிப்பு தொழிலாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என கருத்துக்கள் நிலவுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ