எம்பி கனிமொழியிடம் தூத்துக்குடி சங்கம் வைத்த முக்கிய கோரிக்கை!

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க  நிர்வாகிகள் நேற்று எம்பி கனிமொழியை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : May 14, 2025, 08:13 AM IST
  • ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?
  • தூத்துக்குடி சங்கம் கோரிக்கை.
  • எம்பி கனிமொழியிடம் மனு.
எம்பி கனிமொழியிடம் தூத்துக்குடி சங்கம் வைத்த முக்கிய கோரிக்கை!

தூத்துக்குடி பகுதியின் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்தனர். ஒப்பந்த தொழிலாளர்களாக 3500 பேர் வரை பணியாற்றி வந்த நிலையில், அந்த பகுதி மக்களுக்கு வாழ்வாதாரமாக அந்த ஆலையே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் அந்த ஆலையை நம்பி கடன் உதவித் தொகை மூலமாக கனரக வாகனங்கள் டிப்பர் லாரிகள் ஆகியவற்றை வாங்கி இயக்கி வந்தனர். ஆனால் திடீரென்று அந்த ஆலை மூடப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததோடு கடன் சுமையால் தவித்து வாகனங்களை விற்றுவிடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | அதிமுக தலைமைக்கு விசுவாசமாக தான் இருந்துள்ளேன் - அமைச்சர் ரகுபதி பேட்டி!

இந்தியா காப்பர் தேவைக்கு இறக்குமதியை மட்டுமே முன்னர் நம்பி இருந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூலமாக காப்பர் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்ததாக கூறப்படுகிறது. சீனா போன்ற நாடுகள் அவர்களுக்கு பணம் வழங்கி ஊக்குவித்ததால் ஸ்டெர்லைட் ஆலை மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்பு அடைவதாகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்படும் என்றும் செய்திகள் மிக வலுவாக பறந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் வன்முறைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.

வாழ்வாதாரம் என்பதைத் தாண்டி ஸ்டெர்லைட் ஆலை சமூகப் பொறுப்போடு பல நலத்திட்டங்களை செய்து வந்தது. ஆலை 2018 ம் ஆண்டில் மூடப்பட்டாலும் கொரோனா காலகட்டத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து வழங்க முன்வந்தது. உச்சநீதிமன்ற அனுமதியோடு சுமார் 2266 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்ஸிஜன் நமது பல மாவட்டங்களுக்கும் இலவசமாகவே அனுப்பி வைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சுமார் 300 பேர் அங்கு பணியாற்றும் வாய்ப்பு பெற்ற நிலையில் அதுவும் தற்காலிக வேலை ஆகிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்ட போதும் தூத்துகுடி கிராமமக்களுக்கு அவர்களால் தொடங்கப்பட்ட கல்வி உதவித்தொகை மருத்துவ உதவித்தொகைகள் இலவச மருத்துவ முகாம்கள், திருமண உதவித்தொகைகள், இளைஞர் திறன் மேம்பாட்டு திட்ட உதவிகள் ஆகியவை நிறுத்தப்படவில்லை.

சுமார் 11 கிராமங்களுக்கு இன்றளவும் குடிநீரும் அனுப்பி வருகிறார்கள். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சுமார் 2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களும் வழங்கி உள்ளனர்.  இத்தகைய பயன்களைக் கொண்ட  அந்த ஆலையை மூடிவிட்டதால் தொழில் வளர்ச்சி குறைந்து, நல்ல வருமானம் வாழ்வாதாரம் ஆகியவற்றை இழந்து வறுமையால் மனச்சோர்வுற்று குடிக்கு அடிமையாகி இளைஞர்கள் சமூக குற்றங்களில் ஈடுபடும் சூழல் ஏதும் உருவாகாமல் தடுக்கவும் தூத்துக்குடி சிறந்த சீரான வளர்ச்சியை நோக்கி முன்னேறவும் மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் எம்பி கனிமொழியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | மே 14, 15ம் தேதிகளில் இந்த 10 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News