சென்னையில் அதிகாலை முதல் மழை... இன்னும் தொடருமாம் - வானிலை அப்டேட் இதோ!

TN Rain Updates: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 19, 2025, 08:38 AM IST
  • சென்னையில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
  • 10 மணிவரை மழை தொடரும் என கணிப்பு.
  • தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் அதிகாலை முதல் மழை... இன்னும் தொடருமாம் - வானிலை அப்டேட் இதோ!

Tamil Nadu Rain Updates: அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் சூழலில், சென்னையில் இன்னும் 3 மணிநேரங்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

Tamil Nadu Rain Updates: இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மட்டுமின்றி  திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Rain Updates: அரிய காலை பொழுது...

மேலும், சென்னையில் பெய்து வரும் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X தளத்தில் இன்று காலையில் இரண்டு பதிவுகளை பதிவிட்டுள்ளார். காலை 7.21 மணிக்கு போட்ட பதிவில், "சென்னை மழை - மே மாதத்தில் கடல் ஓரத்தில் இருந்து மேகங்கள் நகர்கின்றன. என்ன ஒரு அரிய காட்சி. தேநீர் அருந்திவிட்டு, பால்கனியில் இருந்து மழையைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிறந்த காலை பொழுது... 

சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை தொடரும் என்றும், அவ்வப்போது தூறல் பெய்யும் என்றும் எதிர்பார்க்கலாம். கடலுக்கு அருகில் உள்ள தென் சென்னை பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. வடக்கு தமிழ்நாடு முழுவதும் வானிலையை பொறுத்தவரை ஏகபோக நாளாக இருக்கும்" என பதிவிட்டிருந்தார். மேலும் அதோடு நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று 8.30 மணிவரை சென்னையின் பல பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறித்த பட்டியலையும் அவர் பகிர்ந்திருந்தார். ஈஞ்சம்பாக்கத்தில் அதிகபட்சமாக 52.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

Tamil Nadu Rain Updates: சென்னையில் மழை தொடரும்!

தொடர்ந்து, காலை 7.50 மணிக்கு போட்ட பதிவில், "சென்னை மழை அறிவிப்பு - அடுத்த 2 மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் திடமான மழை பெய்யும். சில நேரங்களில் அது சற்று தீவிரமாகவும் இருக்கலாம். பின்னர் மீண்டும் நிலையான மழை பெய்யும்.

சென்னைக்கு மிகவும் தகுதியான மழை இது எனலாம். வட தமிழகம் முழுவதும் பருவமழை போன்று நேற்று ஒரு நாள் முழுவதும் சூப்பர் டூப்பர் மழை பெய்தது" என பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க | 'ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்' 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம் - என்ன மேட்டர்?

மேலும் படிக்க | 'கூட்டணி இல்லை என விஜய் சொல்லவில்லை' தமிழிசை கருத்து... தவெக பக்கா பதிலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News