)
தமிழ்நாட்டில் தற்போது வெயில்காலம் குறைந்து, மழைக்காலம் தொடங்கி உள்ளது. வெயில் காலத்தில் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புவது வழக்கம். மனதை மயக்கும் பனி மூட்டம், குளிர், பசுமையான பள்ளத்தாக்குகள் என இயற்கை அழகை கொட்டி கிடக்கும் கொடைக்கானலுக்கு ஒரு பயணம் செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். ஆனால், பயண செலவுகள் அதிகமாகுமோ என்ற கவலை அந்த கனவுக்கு தடையாக இருக்கலாம். இந்நிலையில் சரியான திட்டமிடலுடன், குறைந்த பட்ஜெட்டிலும் கொடைக்கானலின் அழகை முழுமையாக ரசிக்க முடியும். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கொடைக்கானலுக்கு பட்ஜெட் பயணத்தை திட்டமிடும்போது, எப்போது பயணம் செய்கிறோம் என்பது மிக முக்கியம். கோடை காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரை சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என்பதால், தங்குமிடம் மற்றும் பயண செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே, பட்ஜெட் பயணத்திற்கு, கூட்டம் குறைவாக இருக்கும் பருவமழை காலத்தையோ ஜூலை முதல் செப்டம்பர் அல்லது குளிர்காலத்தின் தொடக்கத்தையோ அக்டோபர் முதல் நவம்பரை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இந்த காலங்களில் ஹோட்டல்களுக்கு நல்ல தள்ளுபடிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த காலத்தில் பயணம் செய்தாலும், பேருந்து மற்றும் தங்கும் விடுதிகளை முன்கூட்டியே பதிவு செய்வது, கடைசி நேர அதிகப்படியான செலவுகளை தவிர்க்க உதவும்.
கொடைக்கானலில் விமான நிலையமோ, ரயில் நிலையமோ இல்லை. அருகிலுள்ள விமான நிலையம் மதுரை மற்றும் அருகிலுள்ள முக்கிய ரயில் நிலையங்கள் திண்டுக்கல் அல்லது மதுரை ஆகும். அங்கிருந்து பேருந்து அல்லது டாக்ஸி மூலம் கொடைக்கானலை அடையலாம். பட்ஜெட் பயணத்திற்கு மிகவும் உகந்தது அரசு பேருந்துகள். மதுரை, திண்டுக்கல், பழனி, சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் பிற மாநில அரசு பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன. இது டாக்ஸி செலவை விட மிகவும் குறைவு.
கொடைக்கானலில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற தங்கும் விடுதிகள் உள்ளன. ஏரிக்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகளை தேர்ந்தெடுப்பது, உள்ளூர் பயண செலவுகளை குறைக்க உதவும். ஏனெனில், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பார்க் போன்ற பல முக்கிய இடங்களுக்கு நடந்தே சென்றுவிடலாம். தனியாக செல்பவர்கள் மற்றும் நண்பர்களுடன் செல்பவர்களுக்கு Hostels மற்றும் Dormitories மிக குறைந்த செலவில் சிறந்த தேர்வாக இருக்கும்.
Coaker's Walk: நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த அழகிய நடைபாதையில், காலை அல்லது மாலை வேளையில் நடப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதற்கான நுழைவு கட்டணம் மிகவும் குறைவு.
Bryant Park: ஏரிக்கு அருகில் அமைந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா, வண்ணமயமான மலர்களுடன் கண்ணுக்கு விருந்தளிக்கும். புகைப்பட பிரியர்களுக்கு இது ஒரு சொர்க்கம்.
Pine Forest: அடர்ந்த பைன் மரங்களுக்குள் நடந்து செல்வதும், புகைப்படம் எடுப்பதும் முற்றிலும் இலவசம் மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.
Pillar Rocks மற்றும் Guna Caves: இந்த இடங்களுக்கு செல்ல குறைந்த அளவிலான நுழைவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
Silver Cascade Falls: கொடைக்கானல் நுழையும் வழியிலேயே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க எந்த கட்டணமும் இல்லை.
Dolphin's Nose: சாகச பிரியர்களுக்கு, இந்த இடத்திற்கு சென்று Trekking செய்வது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.
விலையுயர்ந்த ரெஸ்டாரண்டுகளை தவிர்த்து, உள்ளூர் சிறிய உணவகங்களில் சாப்பிடுவது செலவை கணிசமாக குறைக்கும். கொடைக்கானலின் பிரபலமான ஹோம்மேட் சாக்லேட்டுகள், மசாலா பொருட்கள் மற்றும் யூகலிப்டஸ் தைலம் போன்றவற்றை அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளிலோ அல்லது உள்ளூர் சந்தைகளிலோ வாங்கும்போது விலை குறைவாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ