ஐ.டி ஊழியர் ஆணவக்கொலை..? நெல்லையில் பயங்கரம்! நடந்தது என்ன? முழு விவரம்

Tirunelveli IT Employee Murder : நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.  

Written by - Tamil Arasan | Edited by - Yuvashree | Last Updated : Jul 28, 2025, 11:32 AM IST
  • ஐ.டி.ஊழியர் ஆணவக்கொலை?
  • நெல்லையில் பயங்கரம்..
  • என்ன நடந்தது? முழு விவரம்..
ஐ.டி ஊழியர் ஆணவக்கொலை..? நெல்லையில் பயங்கரம்! நடந்தது என்ன? முழு விவரம்

Tirunelveli IT Employee Murder : நெல்லை கே.டி.சி நகரில், ஐடி ஊழியர் கவின் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், கவினை கொலை செய்த சுர்ஜித் கொடுத்திருக்கும் வாக்குமூலமும், இது ஆணவக்கொலையாக இருக்க கூடும் என்கிற கோணத்தை திறந்துள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

ஐ.டி.ஊழியர் காதல் விவகாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி மகன்  25 வயதான கவின். இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கவின் அவரது தாய் செல்வி மற்றும் உறவினர்கள் திருநெல்வேலி கேடிசி நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடிக்கடி  செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு சித்த மருத்துவராக பணியாற்றும்  தனது பள்ளித் தோழியான ஒரு பெண்ணுடன் கவினுக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதற்கு பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. நாளடைவில் கவின் அந்தப்பெண்ணை  திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இளைஞர் பலி..

அந்தப் பெண்ணின் அண்ணனான சுர்ஜித்துக்கு பிடிக்காததால் கவினிடம் இது குறித்து பேச வேண்டும் என்று கூறி இரு சக்கர  அழைத்து சென்றுள்ளார். கே டி சி நகர் அருகே  அஷ்டலட்சுமி நகர் முதலாவது தெரு அருகே அம்பாள் மருத்துவமனை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின் மீது சுர்ஜித்  தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் முகம் கை கால் என அனைத்து பகுதிகளிலும் பலத்த காயமடைந்த கவின் சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சுர்ஜித்  பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  “ தனது தங்கைக்கு கவின் காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தேன்,” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். உயிரிழந்த கவின் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் மற்றும் சுர்ஜித் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுர்ஜித்தின் பெற்றோர், சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேனி, மணிமுத்தாறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்களாகப் பணிபுரிகின்றனர். இதனால், இந்தக் கொலை சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

உயிரிழந்த கவினின் தாய் செல்வி, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “சுர்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள், அவர்களது மகனைத் தூண்டிவிட்டு, என் மகனைக் கொலை செய்ய வைத்தனர்,” என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்த சுர்ஜித் மீது வன்கொடுமை (SC/ST) தடுப்புச் சட்டம், கொலை, கொலை முயற்சி, மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்திய குற்றம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்தக் கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கவினின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.. இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கவினின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர்!

மேலும் படிக்க | ஆணவக் கொலை - காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News