)
Kavin Murder Case Latest Update : திருநெல்வேலியில், ஐ.டி.ஊழியர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை நிலைகுலைய செய்தது. கவினின் கொலை சம்பந்தப்பட்ட வழக்கு தற்போது நடந்து வருகிறது. இதில் சமீபத்திய அப்டேட் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
கவின் ஆணவப்படுகொலை:
தூத்துக்குடியை சேர்ந்த ஐ.டி.ஊழியர் கவின், சென்னையில் பணியாற்றி வந்தார். இவரும், நெல்லையை சேர்ந்த சித்த மருத்தவர் சுபாஷினி என்கிற பெண்ணும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று, கவினை தனியாக அழைத்து சென்று, சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் வெட்டிப்படுகொலை செய்தார்.
போலீஸில் சரணடைந்த 23 வயதான சுர்ஜித், தனது சகோதரி, வேறு சமூகத்தை சேர்ந்த கவினுடன் பழகுவது பிடிக்காத காரணத்தால் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. சுர்ஜித்தின் தாய்-தந்தையர் இருவரும் உதவி காவல் ஆணையர்களாக இருந்தனர். கவினின் கொலையை தொடர்ந்து, அவரது பெற்றோர், சுர்ஜித்தின் பெற்றோருக்கும் இதில் சம்பந்தம் இருப்பதாக குற்றம் சாட்டினர். இதனால், எஸ்.ஐ பதவியில் இருந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தந்தை கைது:
சம்பந்தப்பட்ட குற்றவாளியின் எஸ்.ஐ பெற்றாேர் இருவரையும் கைது செய்யும் வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது பெற்றோர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சுர்ஜித்தின் தந்தை சரவணன் கடந்த ஜூலை 30 அன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்று கவின் உறவினர்கள் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. இறுதியில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றதால் கவின் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கவினின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தாய்க்கு சம்மன்:
சுர்ஜித் மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்ப்ட்டு விசாரணை நடந்து வருகிறது. கவின் வழக்கு சில நாட்களுக்கு முன் சிபிசிஐடி விசாரணைக்கு மாறியது. இதையடுத்து, சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி, சிபிசிஐடி அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 15க்குள் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. கவினின் பெற்றோர் தொடர்ந்து சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி வந்த நிலையில், இப்படியொரு நடவடிக்கை இப்போது எடுக்கப்பட்டுள்ளது.
சுபாஷினி வெளியிட்டிருந்த வீடியோ:
சில நாட்களுக்கு முன்பு, படுகொலை செய்யப்பட்ட கவினை காதலித்த பெண் சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தானும் கவினும் ரொம்பவே உண்மையாக காதலித்ததாகவும், யாரும் உண்மை தெரியாமல் பேசாதீர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தனது பெற்றோருக்கும் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று கூறிய அவர், “இதை விட்ருங்க” என்றும் கோரிக்கை விடுத்தார். கவினை யாரென்றே தெரியாதவர்களுக்கு கூட, அவரது இறப்பு பெரும் வலியை கொடுக்க, உயிருக்கு உயிராய் காதலித்த ஒரு நபர் தனது தம்பியால் கொலை செய்யப்பட்டிருக்கும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சுபாஷினி பேசுவது இருப்பதாக சிலர் தெரிவித்தனர். அவரை வேறு யாரேனும் நிர்பந்தப்படுத்தி வீடியோ பாேட வைத்தார்களா, அல்லது அவரே அந்த வீடியோவை பதிவிட்டாரா என்பதும் தெரியவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ