மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்... தாக்கியது யார்...? முழு பின்னணி இதோ

Attack On Student Chinnadurai: நாங்குநேரியில் சாதிய பாகுப்பாட்டால் சக மாணவர்களால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரை மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 17, 2025, 06:30 AM IST
  • மொபைல் செயலி மூலம் அறிமுகமானவர்கள் அழைப்பின் பேரில் தனியாக சென்றுள்ளார்.
  • அங்கு அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, ஆனால் பெரிய காயம் ஏதும் இல்லை.
  • அவரின் மொபைலும் வழிப்பறி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்... தாக்கியது யார்...? முழு பின்னணி இதோ

Tirunelveli Student Chinnadurai Attack: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சேர்ந்த மாணவன் சின்னதுரை கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாதிய பாகுபாட்டில் சக மாணவர்களால் வீடு புகுந்து அரிவாள் வெட்டப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளானார். அந்த தாக்குதலில் இருந்து மீண்டு வந்து 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார். இதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும், மாணவன் சின்னதுரையை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source

Attack On Student Chinnadurai: சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்

இந்நிலையில், நேற்று மாலை காவல்துறைக்கு ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது. அதில் மாணவன் சின்னதுரை மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் காயம்பட்ட மாணவன் சின்னதுரையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

காயடைந்த மாணவன் சின்னதுரை தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நெல்லை மாநகர துணை ஆணையாளர் சாந்தா ராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் விசாரணை மேற்கொண்டனர். சின்னதுரைக்கு பெரிய அளவில் எந்த காயமும் இல்லை. கையில் மட்டும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | நெல்லை இருட்டு கடையையே வரதட்சணையாக கேட்ட மருமகன்! குமுறும் உரிமையாளர்... பின்னணி என்ன?

Attack On Student Chinnadurai: போலீசார் தெரிவித்தது என்ன?

இதையடுத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சின்னத்துரை தற்போது திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வணிகவியல் நிறுவன செயலாளர் (B.Com. - Corporate Secretaryship) துறையில் படித்து வருகிறார். நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இரவு சுமார் 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரின் தொலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்ட சின்னதுரை, மாவட்ட அறிவியல் மையம் அருகில் உள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடம் சென்று வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Attack On Student Chinnadurai: இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டை மறந்துவிட்டார்

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சின்னதுரையிடம் விசாரித்த பொழுது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகில் உள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றதாகவும், பின்னர் அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சின்னதுரையிடம் பணம் கேட்டதாகவும் அவரிடம் பணம் இல்லாததால் அவரை கட்டையால் அடித்து வலதுகையில் காயம் ஏற்படுத்தி அவரிடம் இருந்த மொபைலை பறித்து சென்றதாகவும் தெரிவித்தார். 

மேலும், சின்னதுரையிடம் காவல்துறையினர் விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்டபோது, தனக்கு மறந்துவிட்டதாக கூறினார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்டபோது அதுவும் தனக்கு மறந்துவிட்டதாக கூறுகிறார். சின்னதுரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிச்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Attack On Student Chinnadurai: 2 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்து நெல்லை பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் நேற்றிரவு அளித்த பேட்டியில்,"சின்னதுரைக்கு பெரிய அளவில் காயம் இல்லை, சிறிய காயம் மட்டுமே. இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார். நான்கு நபர்கள் அவரிடம் செல்போனை வழிப்பறி செய்துள்ளார்கள். பழைய நண்பர் என்று கூறி தொலைபேசி மூலம் அழைத்து இந்த வழிப்பறி நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டும், தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறி தொலைபேசியில் அழைத்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர்களை பிடிப்பதற்கு இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சின்னதுரையுடன் மொபைல் செயலியில் பேசி பழகிய நபர்கள் அவரை வரவழைத்துள்ளனர். சின்னதுரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மறந்துவிட்டதாக கூறுகிறார்" என்றார். மேலும், எதற்காக அந்த பகுதிக்கு சென்றார் என்ற விவரத்தை காவல்துறை விசாரணையில் சின்னதுரை சொல்ல மறுக்கிறார் என கூறப்படுகிறது. அவர் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் ஐடி தொடர்பான விவரங்களை காவல்துறை விசாரணையில் அவர் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது சின்னதுரையின் வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 8ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு! பென்சில் தகராறுதான் காரணமா?- பகீர் பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News