சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை தொடர்ந்து பல்வேறு மாணவ, மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது தொடர்பான யோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஒரு சில மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை சேர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனை தடுக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு வரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் இன்ஜினியரிங், மருத்துவம் பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல், ஐடிஐ போன்ற படிப்புகளில் +2 முடித்தவுடன் எதனை தேர்வு செய்யலாம், அரசு தரும் சலுகைகள் என்ன என்ன போன்றவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் படிங்க: இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலர்ட்!
திருப்பத்தூர் ஆட்சியர் சிவசவுந்தரவல்லியின் முக்கிய முடிவு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கட்டுப்பாட்டு அறை குறித்து ஆட்சியர் சிவசவுந்தரவல்லி தெரிவிக்கையில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியை பெற வேண்டும் என்பதை நோக்குமாகக் கொண்டு இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் இன்ஜினியரிங், மருத்துவம், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல், ஐடிஐ போன்ற படிப்புகளில் +2 முடித்தவுடன் எதில் சேர்வது? எதனை தேர்ந்தெடுத்து படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும்? இந்த படிப்புகளில் சேர்வதற்கு அரசு என்ன மாதிரியான சலுகைகளை தருகிறது? இவற்றிற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து தகவல்களும் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள காலியிடங்கள் எத்தனை என்பது குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொலைபேசி வாயிலாக கேட்டு தெரிந்து கொள்ள முடியும். மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான எந்த ஒரு சந்தேகங்களையும் இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் தெரிந்து கொள்ள முடியும். 04179-225223 என்ற எண்ணிற்கு கால் செய்தோ அல்லது 97878 33608 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல்களையும் சந்தேகங்களையும் மாணவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மாணவர்கள் குறை தீர்ப்பு முகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில் பல முக்கிய நபர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களிடம் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: ஆர்சிபி அணியில் இருந்து விலகுகிறாரா கோலி? என்ன பிரச்சனை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ