திருப்பத்தூர்: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் "நாஷாமுத் பாரத் அபியன்" திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, “என் எதிர்காலம், என் தேர்வு – போதைப்பொருள் வேண்டாம்" என்ற தலைப்பில் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் திருமதி. சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
மாவட்ட அரசு மனநல மருத்துவர் ஹரிதா அவர்கள், போதைப் பொருள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவ மாணவிகளிடையே விரிவாக உரையாற்றினார்.
தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், கல்வியுடன் நின்றுவிடாமல், கட்டாயம் வேலைக்குச் சென்று தங்களது பொறுப்பை உணர்ந்து நல்வழியில் நடக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், "போதைப்பொருள் உள்ளிட்ட தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடாமல் நண்பர்களுடன் பழகினாலும், உங்களது உற்ற நண்பனாய் நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுங்கள். நல்ல புத்தகங்கள் மட்டுமே உங்களை உண்மையான நல்வழியில் அழைத்துச் சென்று வாழ்வில் உங்கள் குறிக்கோளை அடைய உறுதுணையாக இருக்கும். படிப்பு, வேலை போன்ற நற்சிந்தனைகளில் குறிக்கோளை வைத்து தேவையற்ற பழக்கங்களில் சென்று விடக்கூடாது" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்(பொ) திரு. ஜெயகமல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துக்குமார், மனநல மருத்துவர் ஹரிதா மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க: ரயில் முன் பாய்ந்து மரணம்! அரசு ஊழியரின் விபரீத முடிவு..ஷாக் காரணம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









