திருப்பூர் ரிதன்யா வழக்கு: உயிரிழந்த மனைவியை குற்றம்சாட்டும் கணவர் கவின்!

Tiruppur Rithanya Case Update : திருப்பூரில், திருமணமான மூன்று மாதங்களில் புதுப்பெண் ரிதன்யா உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த வழக்கில் தற்போது புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Written by - Yuvashree | Last Updated : Oct 15, 2025, 04:16 PM IST
  • திருப்பூர் ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்!
  • அவரது செல்போன்களை ஆய்வு செய்ய உத்தரவு..
  • நடந்தது என்ன? முழு விவரம்!
திருப்பூர் ரிதன்யா வழக்கு: உயிரிழந்த மனைவியை குற்றம்சாட்டும் கணவர் கவின்!

Tiruppur Rithanya Case Update : திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி வரதட்சணை கொடுமை தாங்காமல் தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பின் மூலமாக ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு கோயிலுக்குச் செல்லும் வழியில் காருக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

Add Zee News as a Preferred Source

வழக்கு விசாரணை:

திருப்பூர் ரிதன்யாவின் மரணம் குறித்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் உயிரிழந்த ரிதன்யாவையே குற்றம்சாட்டி வழக்கு தொடுத்திருக்கிறார். “திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தோழிகளிடம் ரிதன்யா பேசிய விபரங்கள் அவரது செல்போன்களில் உள்ளன” என்று அவர் வழக்கு தொடுத்திருக்கிறார். இதனை தடயவியல் ஆய்வு செய்ய, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிதன்யாவின் மரண வழக்கில், முதன்மையாக கைது செய்யப்படவர் கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி மற்றும் தாய் சித்ராதேவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்கள் சில நாட்களுக்கு பின்பு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். ஜாமின் பெற்று சிறையில் இருந்து வீடு திரும்பியதும், ரிதன்யாவின் இரண்டு செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்யுமாறும் கவின் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஏழு நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிதன்யா பெற்றோரின் கோரிக்கை!

ரிதன்யாவின் தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கை உரிய பிரிவுகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை, மேலும், வழக்கு தாமதம் தான் ஆகும் என்றும், உரிய விசாரணை முடிந்த பிறகு சரியான பிரிவுகளின் கீழ் வழக்கை பதிய வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது, தொடர்ந்து ரிதன்யா மரணத்திற்கு நீதி கிடைக்க அனைத்து மக்களும், நீதி அரசர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க ரிதன்யாவின் தாயார் ஜெயசுதா மற்றும் தந்தை அண்ணாதுரை கேட்டுக்கொண்டனர். இப்போது தங்கள் மகள் மீதே குற்றவாளி இவ்வாறு குற்றம் சாட்டியிருப்பதற்கு அவர்களது பதில் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

மேலும் படிக்க | திருப்பூர் ரிதன்யா வழக்கு : கணவர், மாமனார்-மாமியாருக்கு நிபந்தனை ஜாமின்!

மேலும் படிக்க | திருப்பூர் ரிதன்யா இறந்து 1 மாதம் கடந்து விட்டது! இப்போது வரை அப்டேட் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News