Tirupur Dowry Suicide Case : திருப்பூரை சேர்ந்த 27 வயதுபென் ரிதன்யா, திருமணமான 3 மாதங்களில் வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது, தமிழ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், சம்பந்தப்பட்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இருந்த போதிலும், ரிதன்யாவின் தந்தையும் இதில் குற்றவாளி என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அது ஏன் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
வரதட்சனை கொடுமை:
திருப்பூரை சேர்ந்த ரிதன்யாவுக்கு, 3 மாதங்களுக்கு முன்பு கவின் குமார் என்பவருடன் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். திருமணமான 20 நாட்களிலேயே, ரிதன்யா மாமியார் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு தன் வீட்டிற்கு வந்திருக்கிறார். குடும்பத்தினரிடம் தன்னை மனம் மற்றும் உடல் ரீதியாக கணவரும், மாமனாரும், மாமியாரும் துன்புருத்துவதாக கூறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்த வரதட்சனை கொடுமை தாளாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழக்கும் முன்பு அவர் தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் 7 வாய்ஸ் நோட்ஸ்களை அனுப்பி விட்டு, விஷத்தை குடித்து தனது காருக்குள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். இந்த சம்பவம், தமிழ் நாட்டு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படத்தியுள்ளது.
அனுசரித்து செல்ல சொன்ன தந்தை..
ரிதன்யா, புகுந்த வீட்டில் தன்னை என்னவெல்லாம் கொடுமை செய்கின்றனர் என்பதை தந்தையிடம் கூறியிருக்கிறார். அப்போது அவர், “கணவர் வீடு என்றால் அப்படித்தான் இருக்கும்..” என்று அட்வைஸ் செய்து அனுசரித்து செல்லுமாறு கூறியிருக்கிறார். இதை, ரிதன்யாவின் உயிரிழப்பிற்கு பின்னர் ஊடகத்தினரிடம் பேசும் போது ரிதன்யாவின் தந்தையே கூறினார்.
கைதான கணவர், மாமியார்-மாமனார்:
ரிதன்யாவின் மரண வழக்கில், அவரை வரதட்சனைக்காக கொடுமை படுத்தியதற்காக கணவர் கவின் குமார், மாமியார் சித்ராதேவி, மாமனார் ஈஸ்வர மூர்த்தி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். தனது மகளுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும்
தந்தை ஏன் குற்றவாளி?
ரிதன்யாவின் பெற்றோர், 100 சவரன் நகை, 70 லட்சம் பணம், வால்வோ கார் என்று பல சீதனத்தை கொடுத்துதான் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இருப்பினும் அது போதாது என்று மகளை அவர்கள் கொடுமைப்படுத்திய போது அதை ஏன் என்று தட்டிக்கேட்காத அந்த தந்தை, தனது மகளுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். இப்படி, மகள் செய்வது அறியாமல் நிற்கும் போது தந்தை மீண்டும் கொடுமை படுத்தும் இடத்திற்கே அனுப்ப முற்பட்டது, பலரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், சமீபத்தில் அவர் ஊடகத்தினரிடம் பேசுகையில் “மாற்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்-வேண்டாம் என்பது அவரவர் விருப்பம். ஆனால் என் மகள் ஒருவனுக்கு ஒருவன் என்று உயிரை மாயத்துக்கொண்டார். அதில் எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. அதே மாதிரி அனைத்து பெண்களும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் வாழ வேண்டும் என்று வழி இருந்தால் வாழலாம், இறந்து பாேக வேண்டும் என்கிற அவசியம் இல்லை” என்று கூறியிருக்கிறார். இது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த பலர் “இந்த ஆளுதான் முதல் குற்றவாளி, இவனையும் தூக்கி உள்ள வைக்கனும்” என்று கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | ரிதன்யாவின் கடைசி தருணங்கள்! கதறிய தாய்.. என்ன நடந்தது? -முழு விவரம்
மேலும் படிக்க | ரிதன்யா மரணத்தின் முக்கிய அம்சங்கள்... புகைப்படம் தொகுப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









