)
Crime News In Tamil Nadu: நவீன காலகட்டத்தில் திருமண உறவு உள்பட குடும்ப உறவுகள் மிகவும் சிக்கலான வலையில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் தொடங்கி பல்வேறு காரணங்களை நீங்கள் அடுக்கலாம்.
இதனாலேயே உறவுகளில் நீடிக்கும் பிரச்னைகள் தற்போது பல்வேறு குற்றங்களுக்கும் வழிவகை செய்கிறது எனலாம். அந்த வகையில், திருமணம் நடந்த சில நாள்களிலேயே மனைவியை கணவன் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமண தகவல் மையம் மூலம் புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஷ்வா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. அகஸ்டின் பைனான்சியல் தொழில் செய்து வருவதாகக் கூறப்பட்டது. நல்ல மாப்பிள்ளை என நம்பி பெண் வீட்டாரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த நவ. 23ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
திருமணமான முதலிரவு அன்று, "முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்வோம், பின்பு தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்" என இளம்பெண் கூறியுள்ளார். மறுநாள் இரவும் இதேபோல் தாம்பத்தியம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கணவர் அகஸ்டின் , சுத்தியலை எடுத்து மனைவியைத் தாக்கி, பின்னர் ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட புது மணப்பெண் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தகவலின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அகஸ்டின் ஜோஷ்வாவை கைது செய்தனர்.
விசாரணையில், இவர் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் 'லிவிங் டூ கெதர்' உறவில் இருந்து அவர்களைச் சித்ரவதை செய்தது அம்பலமானது. அந்த விவரங்களை மறைத்துதான் இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். "திருமணத்தின்போது என்னை அவமதித்தார்கள், இவளும் சம்மதிக்காததால் ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டேன்" என அகஸ்டின் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, சிறைவைத்தல், ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அகஸ்டின் ஜோஷ்வா மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், நீதிமன்ற உத்தரவின் பேரில் அகஸ்டினை சிறையில் அடைத்தனர். மேட்ரிமோனியல் மூலமாக வரன் பார்த்து தங்கள் மகளை மனநோயாளிக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டோமே என மணமகள் வீட்டார் வேதனை தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ