Tiruvannamalai Girl Harassment: திருவண்ணாமலையில் 11ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

Tiruvannamalai Girl Harassment: திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமி சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாட்டி வீட்டிற்கு உறவினர்களுடன் சென்றிருக்கிறார்.நேற்று முன்தினம் சுப நிகழ்ச்சிக்கு வந்த இடத்திற்கு கும்பல் ஒன்று சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
கடத்தி சென்ற கும்பல் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி காணவில்லை என பெற்றோர் தேடி வந்த நிலையில், தோட்ட பகுதியில் காயங்களுடன் சிறுமி கிடந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனை அடுத்து, சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் தனக்கு நடந்த கொடூரத்தை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால, இந்த சம்பவம் குறித்து போலீசார் எந்த உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை.
திருவண்ணாமலையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், ”இன்றைய தினம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 15 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் குறித்து செய்தி வெளியிடக்கூடாது என பத்திரிகையாளர்களுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக, தமிழகத்தில் Political Patronage அதிகரித்து வருகிறது. ஆட்சியில் உள்ள திமுக ஆதரவு வழங்கும் என்ற தைரியத்தில் கொடூரமான குற்றங்களை செய்துவிட்டு குற்றவாளிகள் வீதிகளில் நடமாடி வருகிறார்கள். இந்நிலையை மாற்றி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், சட்டம் ஒழுங்கை சீரமைத்து தமிழகத்தை தலைநிமிர செய்யவும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தங்கள் ஆதரவை வழங்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்" எனக் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம்- இவை பற்றி கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நான் பேசாத நாள் இல்லை. உண்மையில் மக்கள் மீது அக்கறையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், பெண்களை இந்த அரசு பாதுகாத்து இருக்கும்.
ஆனால், ஸ்டாலினின் கடந்த 5 ஆண்டுகால நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவோ, முன்னேறவோ கூடாது என்பது தான் அவரது மனநிலையாக இருக்கும் என்று தோன்றுகிறது. தன்னை “அப்பா” என்று அழைக்க விரும்புகிறார். அவரும் ஒரு மகளைப் பெற்றத் தந்தை தான். இருந்தும் அவருக்கு தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்?
தமிழக மக்களே உங்கள் முன்னே இருக்கும் கேள்வி ஒன்று தான். உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமா? ஆம் எனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, வரும் ஏப்ரல் 23 அன்று இரட்டை இலை சின்னத்தில் உங்கள் வாக்கை செலுத்துவது தான்" என கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!