திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஆயத்தப் பணிகள் தீவிரம்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தொடங்கியது உழவாரப்பணிகள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 12, 2025, 05:28 PM IST
  • டிசம்பர் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
  • கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஆயத்தப் பணிகள் தீவிரம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது.

Add Zee News as a Preferred Source

நவம்பர் 24-ஆம் தேதி காலை, திருக்கோயிலில் உள்ள அண்ணாமலையார் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் நாள், டிசம்பர் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதிகாலை 4 மணியளவில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணியளவில் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கோயிலை தூய்மைப்படுத்தும் உழவாரப்பணி இன்று (நவம்பர் 12) காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷனைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்த உழவாரப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் சன்னதி கொடிமரம், பலிபீடம், சரவிளக்குகள், கொத்து விளக்குகள், அகண்ட விளக்கு, நந்தவனம், ஆயிரங்கால் மண்டபம், மடப்பள்ளி மற்றும் அங்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷனின் தேசிய செயலாளர் கூறுகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்த உழவாரப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்இந்த உழவாரப்பணி வருடத்திற்கு ஒருமுறை தங்கள் பவுண்டேஷன் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்று ஒரு நாள் மட்டும் இந்த பணி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தங்கள் பவுண்டேஷன் சார்பாக சுமார் 400-க்கும் மேற்பட்ட கோவில்களில் இதுவரை பிரம்மாண்ட முறையில் உழவாரப்பணி நடைபெற்றுள்ளது என்றும், இந்தப் பணிக்கு திருக்கோயில் நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

கார்த்திகை தீபத் திருவிழா

கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால் மற்றும் பிரம்மன் ஆகிய இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சியளித்த நாள் இது என்று கூறப்படுகிறது.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்றும், அங்கு ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும் ஐதீகம் உள்ளது.

மேலும் படிக்க | திமுக நடத்தியது அறிவுத் திருவிழாவா? அவதூறுத் திருவிழாவா? 'பக்கா மாஸ்' தவெக - விஜய்!

மேலும் படிக்க | சென்னை மெட்ரோ: வருகிறது சுரங்கப் பாதைக்கு அடியில் இன்னொரு சுரங்கம் - இது எப்படி சாத்தியம்?

மேலும் படிக்க | S.I.R பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது: கோரிக்கை மனு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News