)
11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மாணவ, மாணவிகள் விண்ணப்பிப்பதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அப்டேட்டை மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத்தேர்விற்கு வருகிற 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026 (சனிக்கிழமை) (ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகை நீங்கலாக) வரையிலான நாட்களிலும், சிறப்பு அனுமதி 01.06.2026 (திங்கட்கிழமை) மற்றும் 02.06.2026 (செவ்வாய் கிழமை) ஆகிய நாட்களிலும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு விண்ணப்பம்
எனவே, மார்ச் 2026 பருவத்தில் மேல்நிலை முதலாமாண்டு (+1 ARREAR), மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்களாக எழுதி தேர்ச்சி பெறாதோர் / வருகை புரியாதோர் மீண்டும் தேர்வெழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் மேற்கண்ட நாட்களில் சென்று விண்ணப்பிக்கலாம் எனவும், தனித்தேர்வராக தேர்வெழுத விரும்புவோர் திருவாரூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட சேவை மையங்களுக்கு மேற்கண்ட நாட்களில் சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
யாருக்கெல்லாம் விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து சிறப்பு விலக்கு?
மேலும், சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000/- (2025-2026-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சிபெறாத / வருகைபுரியாக மாணவர்களுக்கு மட்டும் இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது). எனவே, விண்ணப்பிக்க வரும் தேர்வர்கள் அனைவரும். தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் உடன் எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு விண்ணப்பிக்க கால அட்டவணை
| விவரம் | தொடங்கும் நாள் | முடிவுறும் நாள் |
| சாதாரண கட்டணத்தில் விண்ணப்பிக்க | 18.05.2026 (திங்கட்கிழமை) | 30.05.2026 (சனிக்கிழமை) |
| சிறப்பு அனுமதி (Tatkal) விண்ணப்பிக்க | 01.06.2026 (திங்கட்கிழமை) | 02.06.2026 (செவ்வாய்க்கிழமை) |
சேவை மையங்களின் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள (Government Examinations Service Centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதார்கள் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாணவ, மாணவிகளுக்கான முக்கிய தகவல்
எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்?
பள்ளி மாணவர்கள்: (மார்ச் 2026 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதோர் / வருகை புரியாதோர்) தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள் திருவாரூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு அனுமதி கட்டணம் எவ்வளவு?
சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1,000. 2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத / வருகை புரியாத பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு அனுமதி கட்டணத்திலிருந்து (ரூ.1,000) விலக்கு அளிக்கப்படுகிறது. சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு செய்வதற்கான தகுதிகளை www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.