TN Assembly Election What To Carry Avoid: தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே, வாக்களிக்கும் நேரம், வாக்குச்சாவடிக்கு என்னென்லாம் கொண்டு செல்லலாம், செல்லக்கூடாது என்பது குறித்து இந்த தொகுதிப்பில் பார்க்கலாம்.

TN Assembly Election What To Carry Avoid: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரமும் நிறைவடைகிறது. இதனால், வாக்காளர்கள் வாக்களிக்க தயாராகி வருகின்றனர். எனவே, வாக்களிக்கும் நேரம், தேவையான ஆவணங்கள், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் இருக்கின்றன. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே, வாக்காளர்கள் முன்கூட்டியே சென்று தங்கள் ஜனநாயக உரிமையை செலுத்த வேண்டும். வரிசையில் காத்தி
வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டுமே வாக்களிக்க வேண்டும். தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து செல்லுவது அவசியம்.
- முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான electoralSearch.eci.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இல்லையெனில் வாக்காளர் உதவி மையச் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை கண்டறிய மூன்று வழிகள் இருக்கின்றன. அதாவது, உங்கள் மொபைல் எண் மூலமும், வாக்காளர் எண் மூலமும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
- electoralSearch.eci.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாநிலம் வாக்காளர் எண்ணை உள்ளிட்டு, பிறகு உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டால், வாக்காளர் அட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு ஒடிபி செல்லும். அந்த ஒடிபியை உள்ளிட வேண்டும்.
- பிறகு, தேவையான விவரங்களை உள்ளிட்டு, கேப்ட்சாவை சரிபார்க்க வேண்டும். search என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரிபார்க்கலாம்.
தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வாக்களிப்பது மிகவும் எளிதானது. ஆனால், முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த சற்று அச்சமடைவார்கள். வாக்களிக்க செல்லும்போது, வாக்காளர் அட்டையை எடுத்து செல்ல வேண்டும். வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரிகள் உங்கள் அடையாளத்தை சரிபார்ப்பார்கள். நீங்கள் வாக்களித்துவிட்டீர்கள் என்பதை குறிக்கவும், அதன் மூலம் இரட்டை வாக்களிப்பதை தடுக்கவும், உங்கள் விரலில் மை இடப்படும்.
பின்னர், நீங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு செல்ல வேண்டும். உங்களுக்கு விருப்பமான வேட்பாளர் அல்லது கட்சி சின்னத்திற்கு அடுத்துள்ள பொத்தானை அழுத்த வேண்டும். உங்கள் வாக்கினை செலுத்தியபிறகு, நீங்கள் எங்கேயும் நிற்காமல், வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொண்டு, நீங்கள் வாக்களிக்க செல்ல வேண்டும்.
வாக்கு செலுத்தும்போது, வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும். வாக்காளர் அட்டை இல்லாமல், நீங்கள் வாக்களிக்க முடியும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வாக்களிக்கலாம். அதன்படி, ஆதார் அட்டை, MNREGA பணி அடையாள அட்டை, வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் அட்டை, பணி அடையாள அட்டை, UDID மாற்றுத்திறனாளி அட்டை, திறனட்டை rgi-ல் வழங்கப்பட்டது ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன்களை எடுத்து செல்ல கூடாது. எந்தஒரு அரசியல் கட்சியுனும், தொடர்புடைய ஆடைகள், அணிகலன்களை, சால்வை போன்றவற்றை அணியக் கூடாது. வாக்களிக்கும்போது, புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். வாக்குச்சாவடிக்க அருகில் அரசியல் விவாதங்களில் ஈடுபடக் கூடாது. கூர்மையான பொருட்கள் போன்ற வாக்குச்சாவடி மையத்திற்கு தடைசெய்யப்பட்ட அல்லது சந்தேகத்திரிய பொருட்களை கொண்டு வரக் கூடாது. இதனை பின்பற்றுவது சமூகமான முறையில் வாக்களிக்க ஏதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
1) கேள்வி - வாக்குப்பதிவு நேரம் என்ன?
பதில் - தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
2) கேள்வி - வாக்காளர் அட்டை இல்லாமல் வாக்களிக்கலாமா?
பதில் - ஆம், வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும், தேர்தல் ஆணையம் அனுமதித்த 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வாக்களிக்கலாம்.
3) கேள்வி - வாக்களார் பட்டியலில் பெயர் எப்படி சரிபார்ப்பது?
பதில் - Electoralserach.eci.gov.in என்ற இணையதளம் அல்லது Voter Helpline App மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!