TN Budget 2025: சென்னைக்கு அருகே வரும் புதிய நகரம்! இனி எல்லாமே அங்கே தான்!

TN Budget 2025: மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதில் முக்கியமானதாக சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Mar 14, 2025, 10:52 AM IST
  • சென்னைக்கு அருகே புதிய நகரம்.
  • 2000 ஏக்கரில் அமைய உள்ளது.
  • பல்வேறு நிறுவனங்கள் வர உள்ளது.
TN Budget 2025: சென்னைக்கு அருகே வரும் புதிய நகரம்! இனி எல்லாமே அங்கே தான்!

தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மகளிருக்கான சிறப்பு திட்டங்கள்,  மாணவர்களுக்கு திட்டங்கள், தமிழ் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள், உயர்கல்வி திட்டங்கள், புதிய மேம்பாலங்கள் என மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதில் முக்கியமானதாக சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025: அடேங்கப்பா ரூ.5 லட்சம் கோடி..? எந்தெந்த துறையில் என்னென்ன அறிவிப்புகள்!

சென்னைக்கு அருகே அமையும் புதிய நகரம்

தமிழ்நாட்டில் சென்னை வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாக மாறி வருகிறது. போக்குவரத்திலும், மக்கள் தொகையிலும் தினம் தினம் அதிகரித்து வருவதால் பல்வேறு நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை தொடங்கி வாகன நிறுத்தம், கூட்ட நெரிசல், போக்குவரத்து பாதிப்பு என சென்னையில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனை சரி செய்யும் நோக்கில் சென்னைக்கு அருகே புதிய நகரத்தை உருவாக்க உள்ளோம் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகே சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகரம் அமைக்கப்பட உள்ளது. இந்த நகரத்தில் ஐடி நிறுவனங்கள், பல்வேறு வசதிகளுடன் கட்டிடங்கள், ஐடி பார்க்குகள், உலகத் தரம் வாய்ந்த வசதி கொண்ட புதிய நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பல்வேறு வசதிகள் இடம் பெற உள்ளது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியான ஒரு நகரத்தை அமைக்க தேவையான அனைத்து வசதிகளும் இங்கே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு திட்டங்கள் அறிமுகம்

1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும். நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.  அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும். ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News