சென்னையில் முக்கிய இடத்தில் வரும் மேம்பாலம்! இனி டிராபிக் தொல்லை இருக்காது!

TN Budget 2025 LIVE: தமிழக அரசின் 2025 பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Mar 14, 2025, 03:29 PM IST
  • பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு.
  • சென்னைக்கு பல்வேறு திட்டங்கள்.
  • உடனடியாக அமலுக்கு வர உள்ளது.
சென்னையில் முக்கிய இடத்தில் வரும் மேம்பாலம்! இனி டிராபிக் தொல்லை இருக்காது!

TN Budget 2025 LIVE: 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார். பட்ஜெட் தொடங்கும் முன்பு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து கேள்வி எழுப்பினார், அப்போது அவரது மைக் ஆப் செய்யப்பட்டதால் உடனடியாக அமலில் ஈடுபட்டு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. அதன் பிறகு தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையை தொடங்கினார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | '₹' டூ 'ரூ'.. முதல்வர் ஸ்டாலின் நீங்கள் இவ்வளவு முட்டாளா? - அண்ணாமலை சரமாரி கேள்வி!

பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

சென்னையில் தற்போது முக்கிய பிரச்சனையாக போக்குவரத்து உள்ளது. இதனை சரி செய்ய பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதர அறிவிப்புகள்

திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். மேலும் அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும். கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது தவிர தமிழகத்தில் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் விரைவில் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News