இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை மனதில் வைத்தும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், மாணவர்கள், முதியோர்களுக்கு அதிக திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உட்கட்டமைப்புகள், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தற்சார்பு தொழில்கள் தொடர்பான திட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணியில் இருந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார்.
மேலும் படிக்க - TN Budget 2025: சென்னைக்கு அருகே வரும் புதிய நகரம்! இனி எல்லாமே அங்கே தான்!
இருசக்கர வாகனங்களுக்கு மானியம்
தற்போது உணவு டெலிவரி தொடங்கி, காய்கறிகள், உடைகள், மருந்துகள் என அனைத்தும் வீட்டிற்க்கே டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இதனை டெலிவரி செய்யும் டெலிவரி ஊழியர்களுக்காக இந்த பட்ஜெட்டில் புதிய திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2000 தற்சார்பு தொழிலாளர்களுக்கு இரு சக்கர மின்சார வாகனம் வாங்க ரூபாய் 20,000 மானியம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், யார் யார் இதற்கு தகுதி ஆனவர்கள் என்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் கூடுதல் திட்டங்கள்
பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் ரூ.75 கோடியில் செயல்படுத்தப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு 3000 வீடுகள் வரும் நிதியாண்டில் கட்டப்படும். இந்த ஆண்டில் 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும். சென்னை மெட்ரோ ரயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசிடம் இருந்து வரும் மானியம் மற்றும் வரிப்பகிர்வு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 16% உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாங் புயல், தென் மாவட்ட மழை வெள்ளம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு சொற்பமாக நிதியை கொடுத்தது. மாநில அரசே தனது நிதி ஆதாரத்தின் மூலம் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இது மாநிலத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. இது மாநிலத்திற்கு ஒன்றிய அரசு ஏற்படுத்தும் அநீதியே தவிர வேறு எதுவும் இல்லை. தேசிய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9 சதவீதமாக இருக்கும் நிலையில், 4 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசின் பங்கு நிதியாக வருகிறது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









