தமிழக அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் நலனுக்கு கூடுதல் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. UPSC (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்காக பிரத்யேக வகுப்பை நிறுவும் ஒரு லட்சிய முயற்சியை தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாணவரும் 10 மாத காலத்திற்கு ரூ. 7,000 மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவார்கள். இதன் மூலம் நிதி சிரமங்கள் இல்லாமல் படிப்பில் முழு கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறார்கள். 10 மாதங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும்.
இந்த மாதாந்திர உதவித்தொகையுடன், செயல்திறன் அடிப்படையிலான நிதி ஊக்கத்தொகையையும் அரசாங்கம் நிறுவுகிறது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கூடுதலாக ரூ. 25000 நிதியும், நேர் முக தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50,000 நிதியும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு ரூ. 2150 கோடியை நிதியை தரவில்லை. இதனை ஈடுகட்டும் விதமாக மாநில அரசே அந்த நிதியை ஏற்கும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்
மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும். 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும். கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும். திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும். 1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









